What Is The True Color Of The Earth
ஹலோ பிரண்ட்ஸ்..! தினமும் இந்த பதிவின் வாயிலாக பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். பொதுவாக நம் அனைவருக்குமே விண்வெளிக்கு செல்ல வேண்டும் வானத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நம் அனைவராலும் அங்கு செல்ல முடியாது.
அப்புறம் எப்படி தான் விண்வெளியில் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வது என்று கேட்பீர்கள். அதற்கு தான் எங்கள் பொதுநலம்.காம் பதிவு உள்ளதே. தினமும் இந்த பதிவில் விண்வெளியில் நடக்கும் தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று பூமியின் உண்மையான நிறம் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
விண்வெளியில் சூரியனின் நிறம் என்ன தெரியுமா |
பூமியின் உண்மையான நிறம் என்ன..?
நம் அனைவருக்குமே மனதில் பல கேள்விகள் இருக்கும். அப்படி இருக்கும் கேள்விகளில் இதுவும் ஓன்று. பொதுவாக நாம் அனைவருமே நம் பள்ளி பருவத்தில் சூரிய குடும்பம் பற்றியும் சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் பற்றியும் படித்திருப்போம்.
ஆனால் நாம் சிறு வயதில் படித்தது இப்பொழுது நினைவில் இருக்கிறதா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான். சிலர் அப்போ படித்தது இப்போ எப்படி நியாபகம் இருக்கும் என்று சொல்வீர்கள்.
விண்வெளி ஏன் அமைதியாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா |
சரி நாம் வாழும் பூமியின் உண்மையான நிறம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? என்ன நண்பர்களே இதற்கான பதிலை யோசித்து கொண்டிருக்கிறீர்களா..? ரொம்ப யோசிக்க வேண்டாம். பூமியின் உண்மையான நிறம் என்ன என்று இங்கு காண்போம்.
பொதுவாக நாம் அனைவருமே பூமியின் நிறம் பச்சை, நீலம் மற்றும் வெள்ளை என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் பூமியில் இந்த 3 நிறங்களும் கலந்த கலவையாக இருக்கின்றன. இருந்தாலும் பூமியில் அதிகமாக காணப்படும் நிறம் நீலம் தான்.
அது எப்படி என்று கேட்ப்பீர்கள். இந்த நீல நிறம் பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தில் இருந்து வருகிறது. சில மீட்டருக்கு மேல் ஆழமாக இருக்கும் போது நீர் நீல நிறமாக இருக்கும். மேலும் கடல்களும் வளிமண்டலத்தில் இருந்து நீல ஒளியை பிரதிபலிக்கின்றன. Rayleigh சிதறல் எனப்படும் ஒரு நிகழ்வின் காரணமாக வளிமண்டலம் நீல நிறமாக உள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து தான் பூமிக்கு நீல நிறத்தை கொடுக்கிறது என்று சொல்லப்படுகிறது.
👉 வானத்தின் உண்மையான நிறம் என்ன தெரியுமா
பூமி நீல நிறமாக இருப்பதற்கான காரணத்தை தெரிந்து கொண்டீர்கள். ஆனால் இன்னொரு கேள்வியும் உங்களுக்கு இருக்கும். அது என்னவென்றால் பூமியில் சில இடங்களில் பச்சை நிறம் தோன்ற என்ன காரணம் என்று கேட்பீர்கள். அதற்கு காரணம் தாவரங்கள் நிலப்பரப்பின் பெரும்பகுதியை உள்ளடக்கியிருப்பதாலும், தாவரங்கள் பச்சை ஒளியைப் பிரதிபலிக்கும் என்பதாலும் பூமியில் சில பகுதிகள் பச்சை நிறமாகத் தோன்றுகிறது.
விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது தெரியுமா |
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |