விண்வெளியில் சூரியனின் நிறம் என்ன தெரியுமா..?

What Colour Is The Sun In Space in Tamil

What Colour Is The Sun In Space

ஹலோ நண்பர்களே..! வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு சுவாரஸ்யமான பதிவாக இருக்கும். நீங்கள் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி உங்களுக்கு இருக்கும். அது என்ன தகவலாக இருக்கும் என்று யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். சரி உங்களுக்கு சூரியனின் உண்மையான நிறம் என்ன என்று தெரியுமா..? விண்வெளியில் சூரியன் என்ன நிறத்தில் இருக்கும் என்று தெரியுமா..? தெரியவில்லை என்றால் இந்த பதிவின் வாயிலாக அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

விண்வெளி ஏன் அமைதியாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா

விண்வெளியில் சூரியனின் நிறம் என்ன..?

விண்வெளியில் சூரியனின் நிறம் என்ன

பொதுவாக நம் அனைவருக்குமே விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அங்கு செல்வது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. இருந்தாலும் அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நமக்குள் இருந்து கொண்டு தான் உள்ளது. சரி வானம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கும். வானத்தின் நிறம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 வானத்தின் உண்மையான நிறம் என்ன தெரியுமா

என்ன நண்பர்களே வானத்தின் உண்மையான நிறம் என்ன என்று தெரிந்து கொண்டீர்களா..? இப்போது இன்னொரு கேள்வி உங்களுக்கு. சூரியனின் உண்மையான நிறம் என்ன..? சூரியன் விண்வெளியில் என்ன நிறத்தில் இருக்கும் என்று தெரியுமா..? அதை இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சூரியன் மஞ்சள் நிறம் என்று நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் சூரியனின் நிறம் வெள்ளை தான். ஆமாம் நண்பர்களே சூரியனின் உண்மையான நிறம் வெள்ளை என்று நாசா தெரிவித்துள்ளது. 

அப்புறம் ஏன் சூரியன் மஞ்சள் நிறமாக நமக்கு தெரிகிறது என்று கேட்பீர்கள்.  நமது வளிமண்டலத்தால் தான் சூரியன் மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. காரணம் சூரிய ஒளியின் அளவு நம் கண்களில் உள்ள ஒளிச்சேர்க்கை செல்களை நிறைவு செய்கிறது. இதனால் சூரியனின் ஒரு தனி நிறத்தை நம்மால் உணர முடியவில்லை. அதாவது குறுகிய-அலைநீள வண்ணங்களான பச்சை, நீலம், ஊதா பூமியின் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படுகின்றன. இதன் காரணமாக தான் சூரியன் நம் கண்களுக்கு மஞ்சள் நிறமாக தெரிகிறது.  

இப்போது தெரிந்து கொண்டீர்களா சூரியன் என்ன நிறம் என்று. இனி யாராவது உங்களிடம் சூரியன் என்ன நிறம் என்று கேட்டால் வெள்ளை நிறம் என்று சொல்லுங்கள்.

விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது தெரியுமா

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science