காதில் கட்டி இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும் தெரியுமா..?

Advertisement

Ear Tumor Symptoms 

பொதுவாக நாம் வாழும் இந்த காலகட்டத்தை பற்றி நமக்கு சொல்லவா வேண்டும். நாம் வாழும் இந்த அவசர உலகில் உணவு உண்பதர்க்கு கூட நேரம் இல்லாமல் போய்விட்டது. அதனால் இந்நிலையில் யாருக்கு எப்பொழுது என்ன நடக்கும் என்று தெரியவே தெரியாது. அப்படி ஒரு காலத்தில் வாழ்ந்து வருகின்றோம். ஆனால் அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

ஆனால் மருந்து மாத்திரைகளை உண்டு பல நோய்களை வரவழைக்கின்றோம். அதை தான் “உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு” என்ற காலத்தில் வந்து வருகின்றோம். சரி இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். நாம் இன்று இந்த பதிவின் வாயிலாக காதில் கட்டி இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை பற்றி தான் காணப் போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.

காது வலி பிரச்சனையில் இருந்து நீங்க வீட்டு வைத்தியம்

காது கட்டி என்றால் என்ன..? 

காது கட்டி அறிகுறிகள்

காது கட்டி என்பது காதில் உருவாகும் அசாதாரண உயிரணுக்களின் நிறை அல்லது கட்டி ஆகும். இதுபோன்ற கட்டிகள் உள் காது, நடுத்தர காது மற்றும் வெளிப்புற காது உட்பட காதின் எந்தப் பகுதியிலும் காது கட்டிகள் உருவாகலாம். அவை உங்கள் செவிப்புலனை பாதிக்க கூட வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்த காது கட்டிகளை ஆரம்பத்திலேயே அறிந்து சரி செய்வது நல்லது. சரி காதில் கட்டி இருப்பதை நாம் எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்பீர்கள். அதனால் காதில் கட்டி இருந்தால் என்ன அறிகுறிகள் ஏற்படும் என்று இங்கு காணலாம்.

தொண்டையில் சதை வளர்ச்சி இருந்தால் என்ன அறிகுறிகள் ஏற்படும்

காது கட்டி அறிகுறிகள்:

காது கட்டியின் அறிகுறிகள் கட்டியின் வகை மற்றும் அது பாதிக்கும் காதின் பகுதியைப் பொறுத்து மாறுபடும்.

  1. தலைச்சுற்றல்
  2. காதில் இரத்தப்போக்கு
  3. காதில் இருந்து இரத்தம் வெளியேறுதல்
  4. காது வலி
  5. தலைவலி
  6. காது கேளாமை
  7. காதில் ஆறாத காயம் அல்லது புண்
  8. காது தோல் நிறமாற்றம்
  9. காது பகுதியில் புதிய மச்சங்கள் அல்லது மச்சமாக மாறுதல்
  10. வீங்கிய நிணநீர் கணுக்கள்
  11. காதில் வித்தியாசமான சத்தங்கள்
  12. பலவீனமான முக தசைகள்.

இதுபோன்ற அறிகுறிகள் உங்கள் காதில் இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்ளவும்.

உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement