மயோசிடிஸ் நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

Myositis Symptoms in Tamil

இப்போது இருக்கும் காலகட்டத்தில் யாருக்கு எப்போது என்ன நோய் வரும் என்றே தெரிவதில்லை. அப்படிப்பட்ட காலகட்டத்தில் இருக்கிறோம். அதெற்கெல்லாம் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகளே காரணம். என்னதான் நாம் பார்த்து பார்த்து சாப்பிட்டாலும் இக்காலத்தில் பல நோய்கள் வருகின்றன. நமக்கு வரும் ஒவ்வொரு நோய்க்குமே ஒவ்வொரு வகையான அறிகுறிகளை நமது உடல் ஏற்படுத்தும். அந்த வகையில் இன்றைய பதிவில் மயோசிடிஸ் நோய் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் உடலில் ஏற்படும் என்பதை கொடுத்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Myositis Disease Symptoms in Tamil:

மயோசிடிஸ் என்றால் என்ன..?

 what is myositis disease in tamil

 மயோசிடிஸ் என்பது தசைகள் வீக்கமாகவும், வலியுடனும், பலவீனமாகவும் மற்றும் சோர்வாகவும் இருப்பதை குறிக்கிறது. இது அடிப்படையில் ஆட்டோ இம்யூன் கோளாறு ஆகும். மயோசிடிஸ் என்ற சொல்லுக்கு தசைகளில் ஏற்படும் அழற்சி என்று பொருள் .   மயோசிடிஸ் குழந்தைகள் உட்பட பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும். தோல் பட்டை, இடுப்பு மற்றும் தொடைகளை சுற்றியுள்ள முக்கிய தசைகளை பாதிக்கும்.  

மயோசிடிஸ் இருந்தால் தோல், இதயம் அல்லது நுரையீரல் போன்ற உடலின் மற்ற பகுதிகளையும் பாதிக்கும்.

தொண்டையில் சதை வளர்ச்சி இருந்தால் என்ன அறிகுறிகள் ஏற்படும்

 

மயோசிடிஸ் நோய்க்கான அறிகுறிகள்:

  • நடக்க சிரமப்படுதல்
  • உட்கார்ந்து எழுவதில் சிரமம்
  • முழங்கைகளை உயர்த்த முடியாமல் சிரமப்படுதல்
  • திடமான பொருட்களை விழுங்குவதில் சிரமம்
  • தசைகளில் வீக்கம்
  • உடல் சோர்வு
  • எடை இழப்பு 

மயோசிடிஸ் பல வகைகள்:

மயோசிடிஸ் பல வகைகள் உள்ளன. அவற்றில் பொதுவான இரண்டு வகைகள் பின்வருமாறு:

  1. பாலி மயோசிடிஸ்
  2. டெர்மடோ-மயோசிடிஸ்
காதில் கட்டி இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும் தெரியுமா..?

 

பாலி மயோசிடிஸ்:

“பாலி” என்பதற்கு பல என்று பொருள். பாலிமயோசிடிஸ் என்பது உடலின் பல தசைகள் வீக்கத்தால் பாதிக்கப்படுவதாகும். இது பெரும்பாலும் உடலின் மற்ற உறுப்புகளை பாதிக்காது.

டெர்மடோ மயோசிடிஸ்:

“டெர்மா” என்றால் தோல். இதுவும் தசைகளை வீங்க செய்து பாதிக்கிறது. ஆனால் இது தசைகளில் வெடிப்புகளை ஏற்படுத்தும்.

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement