வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கணையத்தில் புற்றுநோய் இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும்..!

Updated On: February 14, 2023 11:31 AM
Follow Us:
pancreatic cancer symptoms in tamil
---Advertisement---
Advertisement

Pancreatic Cancer Symptoms

அந்த கால கட்டத்தை விட இந்த காலகட்டம் எவ்வளவோ மாறி விட்டது என்றே சொல்லலாம். தொழில்நுட்ப ரீதியாக மட்டுமில்லாமல் ஆரோக்கிய ரீதியாகவும் இந்த காலகட்டம் மாறிவிட்டது. அந்த காலத்தில் ஒரு நோய்க்கு பல மருந்துகளை கண்டுபிடித்தார்கள். ஆனால் இந்த காலத்தில் பல நோய்களை கண்டுபிடிக்கிறார்கள். நாம் உண்ணும் உணவுப் பழக்கம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இன்றைய நிலையில் அதிக மக்களை பாதிப்பது புற்றுநோய் தான். அந்த வகையில் இன்று கணையத்தில் புற்றுநோய் இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

கணையத்தை பாதுகாக்க உதவும் உணவுகள் என்ன..?

Pancreatic Cancer in Tamil:

Pancreatic Cancer in Tamil

இந்த புற்றுநோய் கணையத்தின் திசுக்களில் தொடங்குகிறது. கணையம் என்பது உங்கள் வயிற்றின் கீழ் பகுதிக்கு பின்னால் உள்ளது. கணையம் செரிமானத்திற்கு உதவும் Enzymes -ஐ வெளியிடுகிறது.

அதுமட்டுமில்லாமல் கணையம் இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த புற்றுநோயானது கணையத்திலிருந்து செரிமான நொதிகளை கொண்டு செல்லும் குழாய்களை வரிசைப்படுத்தும் செல்களில் தொடங்குகிறது.

கணைய புற்றுநோயானது ஆரம்பத்தில் தெரிந்தால் உடனே குணப்படுத்திவிடலாம். ஆனால் இந்த புற்றுநோய் மற்ற உறுப்புகளுக்கு பரவும் வரை அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இருந்தாலும் சில அறிகுறிகளை வைத்து அதை கண்டறியலாம்.

சிறுநீரக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா.?

கணைய புற்றுநோய் அறிகுறிகள்:

  • முதுகு மற்றும் வயிற்று வலி
  • பசியின்மை
  • எடை இழப்பு
  • உங்கள் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல்
  • வெளிர் நிற மலம்
  • இருண்ட நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல்
  • தோல் அரிப்பு
  • இரத்தக் கட்டிகள்
  • உடல் சோர்வு

மேல்கூறிய அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..!

இதையும் படித்துப்பாருங்கள்=> கல்லீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now