இந்த அறிகுறிகள் இருந்தா அது ஜிகா வைரஸ் தான்..! வாங்க தெரிஞ்சிப்போம்..!

Advertisement

Zika Symptoms in Tamil

இப்போது நாம் வாழும் காலம் எப்படி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். எங்கு பார்த்தாலும் புகை மண்டலமும், சுற்றுசூழல் மாசும், துரித உணவுகளும் தான் காணப்படுகிறது. இப்படி ஒரு சூழலில் நாம் வாழ்ந்து கொண்டு வருகிறோம். இந்த சூழ்நிலையில் யாருக்கு என்ன நோய் வரும் என்று யாராலும் சொல்லவே முடியாது. அவ்வளவு ஏன் நோய்க்கு மருந்து கண்டுபிடித்த காலம் மாறி, புதிது புதிதாக நோய்களை கண்டறிந்து வருகிறார்கள். சரி அதை விடுங்க இது தான் நம் அனைவருக்கும் தெரியுமே..! சரி பொதுவாக ஏதாவது நோய் இருந்தால் அதை சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். அது சரி அந்த அறிகுறிகளை வைத்து அது என்ன நோய் என்று எப்படி தெரிந்து கொள்வது என்று நினைப்பீர்கள். அதற்கு தான் நம் பதிவு உள்ளதே. தினமும் நம் பதிவில் ஒவ்வொரு நோய்க்கான அறிகுறிகளை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று ஜிகா வைரஸ் என்றால் என்ன..? அதன் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

தக்காளி காய்ச்சல் அறிகுறி

ஜிகா வைரஸ் என்றால் என்ன..?

ஜிகா வைரஸ் என்றால் என்ன

ஜிகா வைரஸ் என்பது ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஒரு விதமான நோயாகும். நம் அனைவருக்குமே ஏடிஸ் கொசுக்கள் பற்றி நன்றாக தெரியும். டெங்கு, சிக்குன்குனியா மற்றும் நகர்ப்புற மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களை ஏடிஸ் கொசுக்கள் பரப்புகின்றன. அதேபோல் தான் இந்த ஜிகா வைரஸூம் ஏடிஸ் கொசுக்களால் வருகிறது. 

இந்த ஜிகா வைரஸ் இரத்த பரிசோதனை அல்லது மற்ற உடல் சோதனைகள் மூலம் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது. ஜிகா வைரஸுக்கு குறிப்பிட்ட சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை என்பதால், கவனமாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது.

சரி வாங்க இதன் அறிகுறிகள் என்ன என்று கீழ் காணலாம்.

இதையும் செய்து கிளிக் படியுங்கள் 👇
குளிர் காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் 

ஜிகா வைரஸ் அறிகுறிகள்:

  • தலைவலி‌
  • முதுகுவலி
  • அதீத உடல் சோர்வு
  • கண்கள் சிவத்தல்
  • சருமத்தில் ஏற்படும் அரிப்புடன் கூடிய தடிப்புக்கள்
  • மூட்டு வலி
  • கண்களுக்கு பின்னால் வலி
  • வாந்தி
  • மயக்கம்
  • தசைவலி
  • சொறி
  • காய்ச்சல்
  • வெண்படல அழற்சி

ஆகியவை ஜிகா வைரஸ் பாதிப்பின் பொதுவான அறிகுறிகளாகும். இருந்தாலும்,  இந்த அறிகுறிகள் ஜிகா வைரஸ் உள்ள சிலருக்கு ஏற்படுவதில்லை. மேலும் இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.

கண் அழுத்த நோய் அறிகுறிகள்

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement