கல்வியின் சிறப்பு கட்டுரை | Kalviyin Sirappu Katturai

Kalviyin Sirappu Katturai

கல்வியின் சிறப்பு பற்றி கட்டுரை | Kalviyin Sirappu

மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு நீர், உணவு எவ்வளவு அவசியமோ அதே போன்று நம் அறிவை வளர்ப்பதற்கு, சரி எது, தவறு எது என்பதை புரிந்து நடந்து கொள்வதற்கு கல்வி அவசியம். அந்த வகையில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இன்றி, கல்வியின் சிறப்பை பற்றி தெரியாத மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் கல்வியின் சிறப்பை பற்றி நாம் இன்றைய கட்டுரை பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
கல்வியின் பெருமை
கல்வி செல்வம்
கல்வி பற்றிய தலைவர்களின் கூற்று
முடிவுரை

முன்னுரை – கல்வி சிறப்பு கட்டுரை:

  • கல்வி என்பது மனிதனின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. திருவள்ளுவர் கல்வியின் சிறப்பை தனது குறளில்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

  • எடுத்துரைக்கிறார், அதாவது கல்வி கற்றவர்கள் மட்டுமே கண் உடையவர்களாக கருதப்படுவார்கள், கல்வி கற்காதவர்கள் இரண்டு கண்கள் இருந்தும் கண் இல்லாதவராகவே கருதப்படுவார்கள்.

கல்வியின் பெருமை – கல்வியின் சிறப்பு கட்டுரை:

மன்னரும் மாசறக்கற்றோரும் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் மன்னனிற்கு தன் தேசமல்லால் சிறப்பில்லை, கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

  • ஒரு நாட்டின் மன்னனையும், நன்கு படித்தவரையும் ஒப்பிட்டு பார்த்தால் கல்வி கற்றவரே உயர்ந்தவராக கருதப்படுவார். ஏனெனில் அரசனுக்கு அந்த நாட்டில் மட்டுமே சிறப்பு இருக்கும், ஆனால் கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பாக இருக்கும். இப்படி கல்வியின் சிறப்பை மூதுரை விளக்குகிறது.

கல்வி செல்வம் – Kalviyin Sirappu – கல்வியின் சிறப்பு கட்டுரை:

கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

  • இந்த குறள் மூலம் திருவள்ளுவர் மற்றவர்களிடம் இருக்கும் பணம், பொருள் செல்வம் காலத்தால் அழிய கூடியவை என்றும் கல்வி செல்வம் மட்டுமே காலத்தால் அழியாது என்றும் கூறுகிறார்.
  • மற்ற அனைத்து செல்வங்களும் கள்வர்களால் திருடு போக கூடியது, ஆனால் கல்வி செல்வத்தை மட்டும் யாராலும் திருட முடியாது.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

  • ஒருவன் தான் கற்ற கல்வியை படித்தால் மட்டும் போதாது, அக்கல்வி சொல்லும் நெறிமுறைகளை பின்பற்றி வாழவும் வேண்டும்.

கல்வி பற்றிய தலைவர்களின் கூற்று – கல்வியின் சிறப்பு:

  • கல்வி கற்காமல் இருப்பவர்கள் பிறக்காமல் இருக்கலாம் என்கிறார் பிளாட்டோ.
  • பிச்சை புகினும் கற்கை நன்றே என்கிறார் ஒளவையார்.
  • உலகத்தை நல்ல வழியில் மாற்றும் சக்தி கல்விக்கே உள்ளது என்கிறார் நெல்சன் மண்டேலோ.
  • கல்வி மேல் இருந்த பற்று தான் சாக்ரடிஸ் போன்ற தத்துவ ஞானியையும், அப்துல்கலாம் போன்ற அறிவாளியையும் உருவாக்கியுள்ளது.
  • இளமையில் படிக்கும் கல்வி சிலை போன்றது என்று கூறுகிறது ஆத்திச்சூடி.

முடிவுரை – கல்வியின் சிறப்பு:

  • கல்வி அறிவு பெற்ற ஒரு மாந்தர் தான் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை அறிந்து அந்த துன்பத்தை போக்குவதற்கான வழியை அறிந்து அதனை போக்கி இன்பமாக வாழ்வார்கள்.
  • படிப்பு என்பது பள்ளிக்கு சென்று நல்ல மதிப்பெண்கள் மட்டும் பெறுவது அல்ல நம்முடைய அறிவை மேம்படுத்துவதற்கும், தேவையற்ற மூட நம்பிக்கைகளை விளக்குவதற்கும் பயன்படுவது ஆகும்.
  • நம் நாட்டில் இருக்கும் பல தலைவர்கள் கல்வி கற்றதால் மட்டுமே வாழ்வில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். எனவே நாமும் கல்வி கற்போம், வாழ்வில் முன்னேறுவோம்.
நூலகம் கட்டுரை
ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை

 

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai