மனித நேயம் கட்டுரை | Manithaneyam Katturai in Tamil

Manithaneyam Katturai in Tamil

மனித நேயம் காப்போம் கட்டுரை | Humanity Katturai in Tamil

மனிதநேயம் கட்டுரை: இந்த உலகில் தனியாக யாரும் வாழ முடியாது. ஒருவருக்கொருவர் உதவி செய்து மனிதநேயத்துடன் இருந்தால் தான் உந்த உலகத்தில் வாழ முடியும் . மனிதன் என்பது வெறும் வார்த்தையல்ல. இயற்கையினுடைய மிகப்பெரிய படைப்பு. மனிதநேயம் என்றாலே மக்கள் மனதில் முதலில் நினைவுக்கு வருவது அன்னை தெரசா, ஹெலன் கெல்லர், நெல்சன் மண்டேலா போன்ற பெண்மணிகள் தான். ஏன் இவர்களை மட்டும் கூறவேண்டுமென்றால் அவர்களுடைய வாழ்க்கை முழுவதையும் உலகத்திற்காக அர்பணித்தவர்கள். அந்த அளவிற்கு நம்மால் போகமுடியவில்லை என்றாலும் நமக்கு எதிரே நடக்கும் நிகழ்வுகளில் உதவி தேவைப்படுவோருக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து வந்தாலே அதுவே ஒரு மனித நேயம் தான். நமது உலகத்தில் மனித நேயம் என்பது ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் உலகம் எப்போதோ அழிந்திருக்கும். சரி வாங்க நண்பர்களே மனிதநேயம் குறித்து கட்டுரை (manithaneyam katturai in tamil) பார்க்கலாம்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் கட்டுரை

மனிதநேயம் கட்டுரை | மனிதநேயம் பற்றிய கட்டுரை:

குறிப்பு சட்டகம்:

1. முன்னுரை 
2. மனிதநேயம் என்றால் என்ன 
3. தமிழர்கள் இருந்த வரலாற்றில் மனிதநேயம் 
4. வளர்ந்து வரும் மனிதநேயம் 
5. முடிவுரை 

முன்னுரை:

மனிதர்கள் என்பவர்கள் பிறப்பினால் அனைவரும் சமம் என்பதாகும். மற்றவர்கள் மீது உயர்வு தாழ்வுகள் இல்லாமல் அனைவரின் மீதும் அன்பு செலுத்துபவனே உண்மையான மனிதனாவான்.

மனிதநேயம் என்றால் என்ன:

மனிதநேயம் கட்டுரை: உலகில் வாழக்கூடிய முகம் தெரியாத நபர்கள் நம்மை பார்த்து சிரிப்பது கூட ஒரு மனிதநேயம் தான். மனிதநேயம் என்பது சக மனிதர்களின் மீது பாசம் வைப்பது, கருணை, இரக்கம் காட்டுவது போன்றதாகும். மனிதர்கள் என்றாலே அவர்களுக்கு பிரச்சனை இருப்பது இயல்புதான். அந்த பிரச்சனைகளை பார்த்துவிட்டு அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியினை செய்யலாம், பசியால் வாடுபவர்களுக்கு உணவு வாங்கி கொடுக்கலாம், தாகத்தில் தவிப்பவர்களுக்கு நீர் கொடுத்தல், இது போன்ற மனிதநேயமிக்க செயல்களை செய்தால் மனிதருக்குள் ஒற்றுமை நிலை அதிகரிக்கும்.

தமிழர்கள் இருந்த வரலாற்றில் மனிதநேயம்:

சுயநலம் இல்லாமல் பிறர் நலத்தினை காக்க வேண்டும் என்பதில் நம் தமிழர்கள் முன்னோடியாக விளங்கியவர்கள். மனிதநேயத்திற்கு மிகவும் எடுத்துக்காட்டாக விளங்கிய நூல் திருக்குறள். மேலும் மனுநீதி சோழன் ஒரு பசுவின் கன்றிற்காக தன் மகனையேதண்டித்தவன், சிபி சக்கரவர்த்தி புறாவுக்காக தன் உடலையே தானம் செய்ததும், பாரி மன்னன் முல்லைக்காக தேர் கொடுத்தமையும், பேக மன்னன் மயிலிற்காக போர்வை அளித்ததும் வரலாற்றில் மாறாது இருந்து வந்த தமிழர்களின் மனிதநேயம் ஆகும்.

தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு கட்டுரை

வளர்ந்து வரும் மனிதநேயம்:

முன்னெல்லாம் பிறந்தநாள் விழாவினை தன் குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடுவதையே விரும்புவார்கள். இப்போதெல்லாம் அந்த நிலை மாறி ஆதரவற்றோர் விடுதிகளில் இருக்கும் குழந்தைகளோடு கொண்டாடவே பெரும்பாலானோர் விரும்புகிறாரக்ள். இந்த அளவிற்கு மனிதநேயமானது மாற்றம் அடைந்துள்ளது.

முடிவுரை:

மனிதநேயம் உயர்வாக உள்ள மனிதர்கள் இதயத்தால் யோசித்து புத்தியினால் அதை உணரவும் செய்வார்கள். அடுத்தவர்களுடைய குடும்பத்தை மாசில்லாத மனதோடு பார்ப்பது கூடு மனிதநேயம் தான். இதுபோன்ற மனிதநேயத்தை பற்றி கூறினால் அளவிற்கு அதிகமாக சொல்லிக்கொண்டே போகலாம். மனிதநேயத்திற்கு இணையான பொருளோ, செல்வமோ இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை. அதனால் உலகில் பிறந்த ஒவ்வொருவரும் மனிதநேயத்தை காத்து மனிதநேயத்துடன் இருப்போம்..நன்றி வணக்கம்..!

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil