டெங்கு ஒழிப்பு கட்டுரை | Dengue Olippu Katturai in Tamil
டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவி வருகிறது. பொதுவாக இப்பிரச்சனையை நாம் நமது சுற்றுசூலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். சரி இந்த பதிவில் டெங்கு விழிப்புணர்வு பற்றிய கட்டுரையை இங்கு நாம் படித்தறியலாம் வாங்க.
டெங்கு ஒழிப்பு கட்டுரை – Dengue Olippu Katturai in Tamil:
- முன்னுரை
- நோய் அறிகுறி
- பாதிப்புக்கள்
- டெங்கு ஒழிக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்
- முடிவுரை
முன்னுரை:
இப்போதெல்லம் பலவகையான நோய்கள் மனிதனை பாதிக்கின்றன. அந்தவகையில் டெங்கு காய்ச்சல் ஒரு முக்கிய நோயாக பார்க்கப்படுகிறது. இது கொசுவினால் பரவுகின்ற ஒரு நோயாகும். மேலும் இது ஒரு உயிர்கொல்லி தொற்று நோய் என்றாலும் இந்நோயை சரியான சிகிச்சைகளை பெறுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். இக்கட்டுரையில் டெங்கு நோயின் அறிகுறி, அதன் பாதிப்புக்கள் மற்றும் அதனை ஒழிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்ற விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு கட்டுரை |
டெங்கு நோய் அறிகுறி:
இந்நோய் ஒரு மனிதனுக்கு ஏற்பட கொசுக்களே முக்கிய காரணமாகும். இந்நோயை பரப்பும் கொசுக்கள் காலை மற்றும் மாலை 6.00 மணி, நேரமளவில் கடிக்கும். இதன் மூலம் மனித உடலில் டெங்கு வைரஸ் உட்புகுந்து சில நோய் அறிகுறிகளான கண்வலி, தலைவலி, தசைவலி, சிவப்பு நிறபுள்ளிகள் தோன்றல், முதுகு வலி, வாந்தி மற்றும் குமட்டல் நிலைகள் போன்ற அறிகுறிகள் இந்நோய்க்கான அறிகுறிகளாகும். இவ்வகையான அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவதனால் பிரச்சனையை கட்டுப்படுத்த முடியும்.
இதன் நோய்நிலை அதிகரிக்கும் பட்சத்தில் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காய்ச்சல் அதிகரித்து மரணம் நிகழ வாய்ப்புண்டு ஆகவே இது தொடர்பாக நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.
டெங்கு பாதிப்புக்கள்:
இந்நோயானது ஒருவரை தாக்கி அவரது உடலை பலமிழக்க செய்து வயிற்று வலி, வாந்தி, மூக்கு வழியாக குருதி (குருதி என்பது இரத்தம்) பெருக்கு, சிறுநீரோடு குருதி வெளியேறல், சுவாச பகுதி பாதிக்கப்பட்டு நோயாளி சுவாசிக்க சிரமப்படும் நிலையானது ஏற்படும். இது நாளடைவில் உயிரை கொல்லும் மிகவும் ஆபத்தான வைரஸ் ஆகும். இது தென்னாசிய பிராந்தியமான இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் அதிகளவான உயிர்களை கொன்ற தொற்றுநோயாகும். இந்நோய் மிகவும் ஆபத்தான விளைவுகளை மனிதர்களுக்கு ஏற்படுத்துவதனால் இது தொடர்பாக பாதுகாப்பாக இருப்போம்.
டெங்குவை தடுக்கும் வழிமுறைகள்:
இந்த டெங்கு நோயை தடுப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அதாவது இந்நோயை
உருவாக்கும் கொசுவை பெருகாதவாறு நாம் வாழும் சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளலாம். அதாவது நீர் தேங்கும் இடங்கள், குப்பை கூழங்கள், அசுத்தமான நீர்நிலைகள் போன்றனவற்றை இல்லாமல் செய்வதுடன் நாம் வாழும் சூழலை கொசு பெருக்கம் இல்லாத சூழலாக மாற்றுவது தான் இதற்கான சிறந்த தடுப்பு நடவடிக்கை.
மேலும் தூங்கும் போது கொசு வலையை பயன்படுத்தலாம், கொசுவை விரட்டும் பொருட்களை பயன்படுத்தலாம், நோய் தொற்று ஏற்பட்டதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சையினை பெறுதல், நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை உண்ணல் மற்றும் நிறைய நீர் அருந்துதல் போன்ற மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றுவதனால் இந்நோயில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.
முடிவுரை:
ஆபத்தான தொற்று நோய்களில் இருந்து நம்மையும், நமது குடும்பங்களையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். மருத்துவ துறையினரின் ஆலோசனைகளை பின் பற்றி நமது சூழலை நோய்கள் இல்லாத சூழலாக மாற்றி நோய்களில் இருந்து விடுபடுவோம். அழகான வாழ்க்கையை சிதைக்கும் நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்போம். நன்றி வணக்கம்..
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் |
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |