கோபல்லபுரத்து மக்கள் கட்டுரை Class 10 Short | கோபல்லபுரத்து மக்கள் கதை சுருக்கம் class 10 கட்டுரை
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நாம் கோபல்லபுரத்து மக்கள் கதை சுருக்கம் Class 10 கட்டுரை பற்றிய தகவல்களை தான், என்னதான் பாடப்புத்தகத்தில் முழு கதை இருந்தாலும் அதனை ஒரு கட்டுரையாக எழுதும் போதும் சற்று கடினம் தான். கோபல்லபுரத்து மக்கள் கதையை நீங்கள் கட்டுரையாக எழுத/படிக்க விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கோபல்லபுரத்து மக்கள் கதை சுருக்கம்:
குறிப்பு சட்டகம்:
- முன்னுரை
- கிராமத்து விருந்தோம்பல்
- புதிய மனிதன்
- நீச்சுத் தண்ணீர்
- ஜீவ ஊற்று
- அன்னமய்யாவின் பெயர்ப் பொருத்தம்
- முடிவுரை
முன்னுரை:
கோபல்லபுரத்து மக்கள் கதையை எழுதியவர் சாகித்ய அகாடமி இறுதிப் போட்டியாளர் ஆசிரியர் ராஜநாராயணன் அவர்கள், இது ஒரு கரிசல் இலக்கியமாகும். இந்த கதையை படிப்பதன் மூலம் நம்மால் கிராம மக்களின் வாழ்க்கை முறைகளை ஆழமாகப் மற்றும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். இந்த கதையில் வரும் அன்னமய்யா என்ற பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை காணலாம்.
கதைமாந்தர்கள்: அன்னமய்யா, பரமேஸ்வரர் (மணி) மற்றும் சுப்பையா.
கிராமத்து விருந்தோம்பல்:
கோபாலபுரத்தில் வசிப்பவர்கள் பசியுடன் அவ்வழியாக வரும் விருந்தினர்களை அன்புடன் வரவேற்று தாங்கள் உண்ணும் சாந்தமான உணவைப் பகிர்ந்துகொண்டு, உபசரிப்பார்கள் என்று இந்த இலக்கியத்தில் எழுதப்பட்டுள்ளது. இதில் விருதோம்பல் பண்பை மிக அருமையாக ஆசிரியர் ராஜநாராயணன் கூறியுள்ளார்.
புதிய மனிதன்:
கோபல்லபுரத்து மக்கள் கட்டுரை Pdf
சுப்பையா தன்னுடைய புஞ்சை நிலத்தில் அருகு எடுத்துக்கொண்டிருந்தார், அப்படியே சற்று ஓய்வெடுக்க கீழே அமர்ந்திருந்தார், அப்பொழுது அன்னமய்யா யாரோ ஒரு சந்நியாசியை அழைத்து வருவது போல் இருந்தது. அன்னமய்யாவுடன் வந்தது சந்நியாசியோ பரதேசியோ இல்லை அவர் ஒரு வாலிபன் ஆனால் பார்ப்பதற்கு வயதானவர்போல் தாடியும், அழுக்கு ஆடையும், தள்ளாட்டமுமா இருந்தான். அவன் மிகவும் பசியில் இருந்ததை அறிந்த அன்னமய்யா அவனை அந்த நிலத்திற்கு அழைத்து வந்தான்.
நீச்சுத் தண்ணீர்:
அன்னமய்யா கதை
அந்த வாலிபன் அன்னமய்யாவைப் பார்த்து “தம்பி கொஞ்சம் குடிக்க தண்ணி கிடைக்குமா என்று கேட்டார்”, அவர் தமிழில் பேசியதை கண்டா அன்னமய்யா ஆச்சர்யப்பட்டான் பரவாயில்லை அவர்க்கு தமிழ் தெரிகின்றது என்று. பிறகு அன்னமய்யா நீச்சுத் தண்ணீ தரவா? எனக் கேட்டான். காகங்கள் பாத்திரத்தை தள்ளிவிடாமல் இருக்க கரிசல் மண்ணில் பாதி புதைக்கப்பட்டு இருந்த கரிய மண் பாத்திரத்தின் வாய் கற்களால் மூடப்பட்டிருந்தது. அன்னமய்யா மண்பாத்திரத்தின் மேலிருந்த கல்லை அகற்றிவிட்டு அந்த தண்ணீரை கொடுத்தான்.
ஜீவ ஊற்று:
அந்த வாலிபன் நீச்சுத் தண்ணீரை குடித்து முடித்ததும், அன்னமய்யா கலயத்தை அலசி தெளிவு மறைந்த சோற்றின் மகுளி கஞ்சையும் வாலிபனுக்கு கொடுத்தான். நன்றாக குடித்த அந்த வாலிபனுக்கு ஜீவ ஊற்று உருவாகி பொங்கி நிறைந்தது. வயிறு நிறைந்து கஞ்சியை குடித்து முடித்த பின்னர் சற்று மரத்தடியிலேயே சாய்ந்து உறங்கினான்.
சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி கட்டுரை
அன்னமய்யாவின் பெயர்ப் பொருத்தம்:
தூக்கத்திலிருந்து கண்விழித்த அந்த வாலிபன் உன் பெயர் என்னவென்று அன்னமய்யாவிடம் கேட்டான். அதற்கு அவன் அன்னமய்யா என்று கூறினான். அந்த வாலிபன் ‘எனக்கு இன்று நீ இடும் அன்னம் தான்’ என் வாழ்வுக்கு மீண்டும் உயிர் கொடுத்தது என்று நினைத்துக்கொண்டான். அன்னமய்யாவும் அந்த வாலிபனின் பெயரை கேட்டார், அவர் என் பெயர் பரமேஸ்வரன் ஆனால் என்னை மணி என்றே கூப்பிடு என்று கூறினார்.
கம்ம மஞ்சோரும் துவையலும்:
கோபல்லபுரத்து மக்கள் துணைப்பாடம் Class 10
பிறகு இருவரும் சுப்பையாவின் புஞ்சை நிலத்திற்கு வந்தார்கள், அனைவரும் வட்டமாக உட்கார்ந்தார்கள். அப்போது அவருக்கு கம்மஞ்சோறும் துவையலும் கொடுத்தார்கள். இதையும் நன்றாக சாப்பிட்டுவிட்டு உறங்கினான்.
முடிவுரை:
தமிழ் கலாச்சாரங்கள் விருந்தோம்பலை ஒரு அற்புதமான பெருமையாகவும், பாதுகாப்பு கலாச்சாரத்தை நிலைநிறுத்தும் மனிதாபிமான செயலாகவும் கருதுகின்றன. அன்னமய்யவனுடைய படைப்புகளும், உள்ளூர் பழமொழிகளும், தனித்துவம் வாய்ந்த கரிசல், கோபல்லபுரத்து இலக்கியங்களும் இதை நன்கு புரிந்துகொள்ள உதவும்.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |