சுதந்திர தினம் கட்டுரை | Independence Day Katturai in Tamil…!

Advertisement

சுதந்திர தினம் கட்டுரை | Independence Day Katturai in Tamil 

நாம் அனைவரும் சிறு வயதில் இருக்கும் நம்முடைய வீட்டில், பள்ளிக்கூடத்தில் மற்றும் செய்தித்தாள், டிவியில் எல்லாம் சுதந்திரம் என்பதை பற்றி அதிகமாக கேள்வி பட்டிருப்போம். ஆனால் அப்போது அதற்கான அர்த்தம் என்ன என்றும், ஏன் இவ்வாறு இதை பற்றி இவ்வளவு முக்கியமாக பேசுகிறார்கள் என்றும் நமக்கு தெரியாமல் இருக்கும். அதன் பிறகு காலப்போக்கில் ஆங்கிலேயரிடம் சிறந்து 1947-ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது என்று தெரிய வந்தது.

மேலும் இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க அயராது பாடுபட்ட தலைவர்கள் நிறைய நபர்கள் இருக்கிறார்கள். ஆகவே இன்று சுதந்திரத்தின் பெருமையினை பற்றி கூறும் வகையில் சுதந்திர தின கட்டுரையினை பார்க்கலாம் வாருங்கள்..!

சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 

இந்திய சுதந்திர தின வரலாறு கட்டுரை:

முன்னுரை:

சுதந்திரம் என்பது ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை மட்டும் குறிப்பிடும் வகையில் அமைவதை கூறுவது அல்ல. ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்பாக நம்முடைய இந்திய நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்தது. அத்தகைய அடிமை சூழலில் இருந்த நம் நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள் நம்மை மீட்டு நமது நாட்டிற்கு முழுவதுவமாக வாங்கி கொடுத்த முறையே சுதந்திரம் எனப்படும்.

சுதந்திரத்தில் மகாத்மாவின் பங்கு:

சுதந்திரத்தில் மகாத்மாவின் பங்கு

மக்களுக்கு சுதந்திரம் எப்படியாவது கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் என்றும் அதிரடியாக முயற்சிகளை மேற் கொள்ளலாம் அகிம்சை வழியில் செல்ல வேண்டும் என்ற ஒரு உதாரணத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர் தான் மகாத்மா காந்தி.

அதேபோல் மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு, கெதா சத்தியாகிரகம, ஒத்துழையாமை இயக்கம் என எண்ணற்ற இயக்கங்களை அறிமுகம் செய்து அதற்கு ஏற்றவாறு அயராது பாடுபட்டார். இந்திய சுதந்திரம் அடைய வேண்டும் என்ற கனவிற்கு முக்கிய பங்கு வகிக்கும் வகையில் காந்தி அவர்கள் இதில் தொண்டு செய்தார்.

சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்கு:

சுந்திரம் என்பது ரத்தம் இன்றி, கலவரம் இன்றி பெறப்படவில்லை இத்தகைய சுதந்திரத்திற்கு பிறகு எண்ணற்ற வீரர்களின் மரணமும், இரத்தமும் சிந்தி இருக்கிறது என்று மக்களுக்கு கூறும் வகையில் எண்ணற்ற பெண்களின் பங்கும் இதில் காணப்படுகிறது.

ஆங்கிலேயரை எதிர்ப்பு போராட வேண்டும் என்பதற்கு முதல் பெண்மணியாக எதிர்த்து வந்தவள் தான் வேலுநாச்சியார். அதற்கு பிறகு கிட்டூர் ராணி சென்னம்மா, ஜான்சி ராணி லட்சுமிபாய், சின்னமான பேகம் ஹசரத் மஹல் என இவர்களின் சுதந்திர போராட்ட பங்கு என்பது கி.பி.1700 முதல் கி.பி.1900 வரை நிறக்காமல் தொடங்கியது.

சுதந்திர தின வாழ்த்து கவிதை

இந்தியா சுதந்திரம் அடைந்தது:

இந்தியா சுதந்திரம் அடைந்தது

பல வகையான போராட்டங்களுக்கும், விடா முயற்சிக்கும் பிறகு பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் அவர்கள் 1947 ஆம் ஆண்டில், ஜூன் 3-ம் தேதி ‘பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா’ என்றும், ‘முஸ்லீம் பாகிஸ்தான்’ என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார்.

இத்தகைய தேச பிரிவினை அறிவிப்பிற்கு பிறகு பாகிஸ்தான் தனி தேசமாக 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி  பிரிந்தது. மேலும் இந்தியா நள்ளிரவில், 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி அன்று சுதந்திரம் பெற்றது. 

இந்திய சுதந்திர தின வரலாறு:

நமது இந்திய நாடு ஆனது சுமார் 2 நூற்றாண்டுகள் காலத்திற்கு முன்பாக ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்தன. இத்தகைய பிரிட்டிஷ் காலத்தில் மக்களை அவர்கள் மிகவும் அடிமை படுத்தி நடத்தி வந்தனர்.

இத்தகைய அடிமைத்தளத்தில் இருந்து மக்களை மீட்டெடுத்த இந்தியாவை சுதந்திரம் அடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மஹாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், சந்திரசேகர் ஆசாத், பகத்சிங், திருப்பூர் குமரன், பாரதியார் மற்றும் ஜவஹர்லால் நேரு என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற கடுமையான நிகழ்வுகளுக்கு பிறகு சுதந்திரம் அடைந்ததே இதற்கான வரலாறு ஆகும்.

முடிவுரை:

இவ்வளவு பெரிய போராட்டதிற்கு பிறகு 1947-ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி அன்று வருடந்தோறும் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த சுதந்திர தினவிழா அன்று அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதேபோல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போட்டிகள் நடத்தி கொடியேற்றம் செய்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது.

இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க Tamil Katturai
Advertisement