காமராஜர் கல்வி பணி | Kamarajar Kalvi Pani in Tamil Speech | Kamarajarin Kalvi Panigal in Tamil
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சா்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுவர் பெருந்தலைவர் காமராஜர். தமிழகத்தை ஒன்பது ஆண்டு ஆட்சி செய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுகிறது. பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கர்ம வீரர், கல்விக்கண் திறந்தவர் என்று காமராஜர் அவர்களை பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவருடைய கல்வி பணியை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
Kamarajar Kalvi Pani Katturai | Kalvi Paniyil Kamarajar Speech in Tamil:
முன்னுரை:
காமராஜர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள், விருதுநகரில் குமாரசாமி – சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் காமாட்சி, அவருடைய தாயார் செல்லமாக அவரை ராஜா என்று அழைப்பார். அதுவே பின்னர் காமராஜர் என்று பெயர் மருவி வந்தது.
காமராஜரின் குழந்தைகளுக்கான பேச்சு போட்டி கட்டுரை
காமராஜர் கல்வி பணி:
காமராஜர் அவர்கள், தனது ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேய தொடங்கி, ஏனாதி நாராயண வித்யா சாலையில் 1908 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டார். பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலை பள்ளியான “சத்ரிய வித்யா சாலா பள்ளியில்” சேர்ந்தார். அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது அவருடைய தந்தை இறந்து விட்டார். அதனால் அவரால் படிக்கச் முடியவில்லை. அதன் பிறகு தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.
தனது 18-வது வயதில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அவரது அயராது உழைப்பின் காரணமாக தலைவரானார். தாய்நாட்டின் உள்ள மக்களுக்காக 9 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1954 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி வகித்தார்.
காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை |
இவர் முதலமைச்சர் ஆன பிறகு அனைத்து குழந்தைகளுக்கும் தொடக்க கல்வி இலவசமாகமாக்கப்பட்டது. காமராஜர் படிக்க விட்டாலும் தன் தேசத்தில் உள்ள மக்கள் படிக்க வேண்டும் என்று நினைத்தார்.
எந்த சொத்தும் இல்லாவிட்டாலும் கல்வி ஒன்றே சொத்து என்று நினைத்தார். கல்வி என்ற அறிவை நாம் பெற்று விட்டாலே வறுமை ஒளிந்து விடும் என்று நினைத்தார். மாடு மேய்த்து கொண்டிருந்த சிறுவனிடம் பள்ளிக்கு செல்லவில்லையா என்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுவன் உணவு தருவீர்களா என்று கேள்வியை எழுப்பினார். அதற்கு கொண்டு வந்த திட்டம் இலவச மதிய உணவு திட்டம். மாடு பிடித்த கையை கல்வியை கற்க வைத்த பெருமை காமராஜரே சேரும்.
இதனால், ஆங்கிலேயேரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்வி கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக இருந்தது. இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்த திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது எனலாம்.
காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மற்றவர் பார்த்து வியக்கும் வகையில் ஆட்சி நடத்தினார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி சுப்பிரமணியத்தையும் அவரை முன்மொழிந்த எம்.பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார்.
முதல்வரான பின்னர் தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6 ஆயிரம் பள்ளிகளை திறந்தார்.
காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள் |
இறப்பு:
1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி தன்னுடைய 72 வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. தனது வாழ்நாள் முழுவதும் கல்யாணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தார்.
இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → | Tamil Katturai |