தவறான நம்பருக்கு ரீசார்ஜ் பண்ணினால் என்ன செய்வது
போன் என்று ஒன்று இருந்தால் அதனை பயன்படுத்துவதற்கு ரீசார்ஜ் செய்வது அவசியமானது. இதனை ஒவ்வொரு மாதிரியாக ரீசார்ஜ் செய்வார்கள். அதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிம்களை பயன்படுத்துவார்கள். சில பேர் மாதம் மாதம் செய்வார்கள், சில பேர் முன்னடியே ஒரு வருடத்திற்கான ரீசார்ஜ் செய்திடுவார்கள். இப்படி ரீசார்ஜ் செய்யும் போது சில நேரங்களில் தவறான நம்பருக்கு ரீசார்ஜ் செய்திடுவார்கள். அதவாது ஒரு நம்பர் மாற்றி போட்டாலும் வேறொரு நம்பருக்கு ரீசார்ஜ் ஆகிடும். இதை ஒரு படத்தில் கூட பார்த்திருப்பீர்கள் குள்ள நரி கூட்டம் என்ற படத்தில் தவறான நம்பருக்கு ரீசார்ஜ் செய்திடுவார்கள். அதனை வாங்குவதற்குள் ஹீரோ படாத பாடு பட வேண்டியிருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் தவறான நம்பருக்கு ரீசார்ஜ் செய்தால் என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தவறான நம்பருக்கு ரீசார்ஜ் செய்தால் எப்படி மீட்டெடுப்பது:
தவறான நம்பருக்கு ரீசார்ஜ் செய்து விட்டால் அவ்வளவு தான், ஈ ஒண்ணுமே செய்ய முடியாது என்று சொன்னால் நம்பாதீங்க. ஏனென்றால் இனி தவறான நம்பருக்கு ரீசார்ஜ் செய்தாலும் ஈஸியா மீட்டெடுக்கலாம் அவை எப்படி என்று தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
முதலில் 8800001915 என்ற நம்பரை சேவ் செய்து வைத்து கொள்ளுங்கள். இந்த நம்பருக்கு நீங்கள் வாட்சப் மூலமாக நீங்கள் எந்த நம்பருக்கு ரீசார்ஜ் செய்தீர்கள், நெட்ஒர்க் தகவல், எந்த ஆபிசில் ரீசார்ஜ் செய்தீர்கள் போன்ற தகவலை கொடுத்தால் எல்லா தகவலும் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து விட்டு refund செய்திடுவார்கள்.
அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் ரிப்போர்ட் செய்யலாம். அதற்க்கு உலகில் அதிகமாக பயன்படுத்த கூடிய நெட்ஒர்க் ஆக VI, Jio மற்றும் Airtel சிம் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இவற்றின் மின்னஞ்சலை தெரிந்து கொள்வோம் வாங்க..
VI- customercare@vodafoneidea.com
Airtel- airtelpresence@in.airtel.com
JIO- care@jio.com
மொபைலில் இருந்து Phonepe Account-ஐ நிரந்தரமாக நீக்குவது எப்படி..?
Gpay, Phonepay, Paytm போன்ற எந்த ஆப்களில் பணம் தப்பா செலுத்திட்டா இனி கவலை இல்லை.!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |