கிரிக்கெட் வீரர்களுக்கு கொடுக்கப்படும் T-Shirt எண்ணிற்கு பின் இப்படி ஒரு ரகசியமா..?

Advertisement

Jersey Number in Cricket Players in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! அன்றும் சரி இன்றும் சரி நம்மில் பலருக்கும் பிடித்த விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். என்ன தான் பலருக்கும் கபடி, கால்பந்து என்று பிடித்தாலும், கிரிக்கெட்டை பார்க்க விரும்பாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வளவு ஏன் நம்மில் பலரும் வேலைக்கு கூட லீவ் போட்டுவிட்டு கிரிக்கெட் பார்ப்பார்கள். அப்படி கிரிக்கெட்டை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா..? என்ன வென்று மேல் படித்து தெரிந்திருப்பீர்கள். சரி கிரிக்கெட் வீரர்களுக்கு கொடுக்கப்படும் T-Shirt எண்ணிற்கு பின் இருக்கும் ரகசியம் உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

கிரிக்கெட்டில் எதுக்கு Hat Trick என்று சொல்கிறார்கள்.. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன

கிரிக்கெட் வீரர்களுக்கு கொடுக்கப்படும் T-Shirt எண்ணின் ரகசியம்..?

jersey number in cricket players

பொதுவாக கிரிக்கெட் பலருக்கும் ஜெர்சி எண் என்றால் என்னவென்று தெரியும். அதாவது கிரிக்கெட் வீரர்களுக்கு கொடுக்கப்படும் T-Shirt -ற்கு கொடுக்கப்படும் எண்ணை தான் ஜெர்சி எண் என்று சொல்கிறார்கள். 

  • கிரிக்கெட்டில் இருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு ஜெர்ஸி எண் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் அப்படி வழங்கும் ஜெர்சி எண் வீரர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி தான் வழங்கப்படுகிறது.
  • இப்படி கிரிக்கெட்டில் வழங்கப்படும் ஜெர்சி எண்ணை வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம். அதற்கென்று எந்தவொரு ரூல்ஸ் உம் கிடையாது.
  • அதனால் ஒவ்வொரு வீரர்களும் தனக்கு பிடித்த எண்ணை ஜெர்சி எண்ணாக தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதாவது தனக்கு பிடித்த எண், பிறந்த தேதி அல்லது நியூமராலஜி எண் என்று தேர்ந்தெடுக்கலாம்.
  • அதுபோல கிரிக்கெட்டில் இருக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஜெர்சி எண் ICC ரூல்ஸ் & ரெகுலேஷன் படி 1 லிருந்து 99 வரை இருக்க வேண்டும். ஆனால் இந்த ரூல்ஸ் சில அணிகளுக்கு கிடையாது.
  • ஆனாலும் சில ரூல்ஸ் இருக்கிறது. அதாவது ஒரே கிரிக்கெட் அணியில் இருக்கும் 2 வீரர்களுக்கு ஒரே ஜெர்சி எண் இருக்க கூடாது. ஆனால் வெவ்வேறு அணியில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரே ஜெர்சி எண் இருக்கலாம்.
  • அதுபோல ஒரு வீரர் தனக்கு இருக்கும் ஜெர்சி எண்ணை மாற்ற நினைத்தால் அதை International Cricket Council -ல் கூறி மாற்றி கொள்ளலாம். மேலும் ஜெர்சி எண் இல்லாமலும் விளையாடலாம். அதற்கு International Cricket Council -ல் அனுமதி பெறவேண்டும்.
  • மேலும் 3 டிஜிட் உள்ள எங்களை ஜெர்சி எண்ணாக வைக்க நினைத்தால் அதற்கான சரியான காரணத்தை International Cricket Council -ல் கூறி மாற்றி கொள்ளலாம்.

இப்படி தான் ஜெர்சி எண் ஒவ்வொரு வீரருக்கும் பயன்படுத்தப்படுகிறது.

நாம் Tv-யில் பார்க்கும் கிரிக்கெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement