Vidukathai with Answer in Tamil
நமது முன்னோர்களின் காலத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தபோது குழந்தைகள் பெரும்பாலும் தாத்தா,பாட்டியிடமே வளர்ந்தார்கள். மாலை மற்றும் இரவு நேரங்களில் தாத்தா, பாட்டியிடம் கதைகள் கேட்பதே பெரிய பொழுதுபோக்கு. அதாவது அவர்கள் அறிவு வளரும் கதைகள், கற்பனை வளரும் கதைகள் என பலவிதமான கதைகளை கூறுவார்கள். அதில் ஒன்று தான் விடுகதைகள் கேட்பது. இது குழந்தைகளின் அறிவாற்றலை வளர்ப்பதுடன், கூர்ந்து சிந்திக்கும் மனப்பாங்கை வளர்க்க உதவுகின்றது. இதனால் மனம் ஒருங்கிணைப்பு கிடைத்து எதையும் கூர்ந்து செய்யும் ஆற்றல் பெறுவார்கள். அப்படிப்பட்ட சில விடுகதைகளை தான் இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து உங்களின் சிந்திக்கும் திறனை அதிகரித்து கொள்ளுங்கள்.
புதிர் விடுகதைகள்:
- அடிகளை வாங்கி நம்மை ஆட வைப்பான் அவன் யார்.?
விடை: பறை
2. திட்டி திட்டி தீயில் போட்டாலும், அள்ளி அள்ளி அனலில் போட்டாலும், வாரி வாரி வாசம் தருவான் மனம் குளிர நறுமணம் தருவான் அவன் யார்.?
விடை: சாம்பிராணி
3. அச்சில்லா சக்கரம், அசைந்தாடும் சக்கரம், அணிந்தால் அழகாகும் பெண்ணின் கரம் அது என்ன.?
விடை: வளையல்
4. உன் அறிவுக்கும் பொருளாவேன், இரவின் அழகுக்கும் துணையாவேன், நான் யார்.?
விடை: மதி(நிலவு)
5. காலில்லாமல் ஓடுவான் அவன் யார்.?
விடை: பாம்பு
6. ஆயிரம் பேர் கட்டிய, அழகு மண்டபம் ஒருவர் கண்பட்டு, உருக்குலைந்து போனதாம் அது என்ன.?
விடை: தேன்கூடு
7. தொடமுடியாத உயரத்தில் தொடர்ந்து வரும் ராணி;பகலில் வெளிவராத தேனி அவள் யார்.?
விடை: நிலவு
8. ஒன்றினுள் அடைக்க முடியும் ஆனால் அல்ல முடியாது;உணர முடியும்,ஆனால் உருவம் இல்லாதது.அது யார்.?
விடை: காற்று
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |