Vidukathai Tamil Riddles With Answers
நம் முன்னோர்களின் காலத்தில் மின்சார வசதி கிடையாது, இருந்தாலும் இரவு நேரத்தில் வாசலில் உட்கார்ந்து பேசுவார்கள். அப்படி பேசும் போது பேரன், பேத்திகள் இருந்தால் விடுகதையை கேட்டு பதிலை சொல்ல சொல்லுவார்கள். மூளையை சிந்திக்க வைப்பது விடுகதையாக இருக்கிறது. ஆனால் இன்றைய காலத்தில் யாரும் வாசலில் அமர்ந்து பேசுவதில்லை. காரணம் இந்த ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் போன் இருப்பதால் போனை பார்த்து கொண்டே இருக்கிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை சிந்திக்க வைக்க கூடிய விடுகதைகளை தெரிந்து கொள்வோம்.
தமிழ் விடுகதைகள்:
- மூடாத தொட்டியில் எடுக்க எடுக்க நீர் அது என்ன?
விடை: கிணறு
2. ஏழை படுக்கும் பாயை எடுத்துச் சுருட்ட ஆளில்லை அது என்ன?
விடை: பூமி
3. கரையும், உப்பு அல்ல, தண்ணீரில் குளிப்பான், மனிதனுமல்ல அது என்ன?
விடை: சோப்பு
4. கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்
விடை: பூட்டு
5. ஊருக்கு உழைக்கும் உத்தமன் உரக்க ஊதி குரல் எழுப்புவான்
விடை: சங்கு
6. தூங்கவும் வைப்பான் தூக்கியும் வீசுவான்
விடை: காற்று
7. தாய் தரையில், மகள் மகுடத்தில்.
விடை: சிப்பி – முத்து
8. மூடி வைத்த பெட்டிக்குள் சத்தாக இரண்டு தைலம்
விடை: முட்டை
9. அண்ணன் தம்பி பன்னிருவர் – ஒருவன் மட்டும் குறைப் பிரசவத்தில் பிறந்தான்
விடை: 12- மாதங்கள்- பிப்ரவரி
10. கரடுமுரடு மனிதனிடம் கனிவான இனிப்பு
விடை: பலாப்பழம்
11. வளைந்து தெளிந்தவன் பயணத்திற்கு உதவுவான்
விடை: சாலை
12. எங்க வீட்டுக்கு கிணத்துல வெள்ளிக் கிண்ணம் அது என்ன?
விடை: நிலா
13. குலை தள்ளி பலம் தருவேன் குழந்தைகளுக்காக உயிர் விடுவேன் நான் யார்?
விடை: வாழை
14. ஐந்தடுக்கு நான்கு இடுக்கு அது என்ன.?
விடை: விரல்கள்
`15. நடைக்கு உதாரணம் சொல்வார்கள் ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது அது என்ன.?
விடை: பூனை
16. கண் மூக்கு காது வாய் இல்லாதமுகம் எது.?
விடை: அறிமுகம்
17. ஒருவனை மட்டும் அழைக்க மாட்டான் ஊரையே கூட்டி உண்பான் அந்த உத்தமன் பெயர் என்ன?
விடை: காகம்
18. அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் பெயர்?
விடை: சந்திரன்
19. பார்க்க அழகு பாம்புக்கு எதிரி அது என்ன?
விடை: மயில்
20. உடன் வருவான் உதவிக்கு வர மாட்டான் அவன் யார்?
விடை: நிழல்
விடுகதைகள் | Vidukathaigal |
சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள் |
குழந்தைகளுக்கான விடுகதைகள் |
விடுகதை விளையாட்டு விடைகள் |
கணக்கு விடுகதைகள் |
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |