HighWay -ல இருக்கிற இந்த BOX எதுக்காக வச்சிருக்காங்க தெரியுமா.?

Advertisement

SOS Box on Highway in India

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவினை பற்றி பார்க்கலாம். முக்கியமாக இப்பதிவு வாகன ஓட்டுனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது, HighWay -ல ஒரு பாக்ஸ் வைத்திருப்பார்கள். அந்த பாக்ஸ் எதற்காக இருக்கிறது.? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நம் HighWay -யில் பயணிக்கும் போது பலவற்றை வேடிக்கை பார்த்து கொண்டே போவோம். அப்படி பார்க்கையில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு இடையில் சாலையின் இருபுறமும் ஒரு Box வைத்திருப்பார்கள். அந்த Box எதற்காக வைத்திருக்கிறார்கள் என்று நம்மில் பலபேர் யோசித்து இருப்போம். அப்படி யோசித்து இருப்பவர்களுக்கு இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஓகே வாருங்கள் அதனை பற்றிய பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

What is SOS in Highway in Tamil:

what is sos in highway in tamil

நெடுஞ்சாலைகளில் மஞ்சள் நிற SOS பாக்ஸ் ஒன்று இருக்கும். SOS என்றால் Save Our Soul ஆகும். அதாவது, அவசர உதவி கோரல் குறியீடு என்று அழைக்கப்படுகிறது. HighWay -யில் ஒவ்வொரு 2 கிலோ மீட்டர் இடைவெளியில் சாலையின் இருபுறமும் இந்த பாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கும். நெடுஞ்சாலையில் ஏதேனும் விபத்து உள்ளிட்ட அவசர கால உதவிக்கு இந்த பாக்ஸ்யை பயன்படுத்தி கொள்ளலாம்.

பாத்ரூமில் உள்ள வாஷ் ஃபேசனில் கூடுதலாக ஒரு ஓட்டை இருக்கும்.. அதை எதற்கு தெரியுமா..?

அதாவது, நெடுஞ்சாலையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு உங்களுக்கு உதவி வேண்டும் என்ற நிலையில், நீங்கள் இந்த SOS-ற்கு சென்று பட்டனை லாங் பிரஸ் செய்வதன் மூலம் அவசர கால தொலைபேசியை அழைக்கலாம். இந்த பாக்சின் கீழ் மைக் அமைக்கப்பட்டிருக்கும். அதன் வாயிலாக நீங்கள் பேசி உங்களுக்கு தேவையான உதவியை கேட்கலாம். நீங்கள் பேசுவது அருகில் உள்ள சுங்கச்சாவடி, போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற சேவை மையத்திற்கு சென்று விடும். SOS பாக்ஸின் மேற்பகுதியில் ஸ்பீக்கர் அமைக்கப்பட்டிருக்கும். அதன் வழியாக கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் பேசுவதை நீங்கள் கேட்கலாம்.

ஒருவேளை, விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் SOS இல்லையென்றால், உங்கள் போன் மூலம் 1033 என்ற எண்ணிற்கு கால் செய்து உதவி கேட்கலாம்.

ரயிலின் மேல் எதற்கு இந்த வட்ட வளையம் பொறுத்தப்பட்டுள்ளது தெரியுமா..?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement