இன்டர்நெட்டை யார் கண்டுபிடித்தது.? | Who Invented Internet in Tamil

Advertisement

Who Invented Internet in Tamil

இன்றைய உலகம் இன்டர்நெட் இல்லாமல் இயங்காது. அந்த அளவிற்கு இன்டர்நெட்டின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. சொல்லப்போனால் இன்டர்நெட் இல்லாமால் வாழக்கையே இல்லை. அப்படி நாம் எல்லா தேவைகளுக்கும் முதன்மையாக இருப்பது இன்டர்நெட் தான். அப்படிப்பட்ட இன்டர்நெட்டை யார் கண்டுபிடித்தார்.? என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா.? அப்படி யோசித்தர்கள் என்றால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, இப்பதிவில் இன்டர்நெட் கண்டுபிடித்தது யார்.? என்பதை விவரித்துள்ளோம்.

பல்வேறு சாதனங்களுக்கு இடையே தொடர்பு கொள்ள (TCP/IP) மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கணினி நெட்வொர்க்குகளின் உலகளாவிய அமைப்பாகும். எனவே, இன்டர்நெட் எங்கு தோன்றியது.? யாரால் கண்டுபிடிக்கப்பட்டது.? உள்ளிட்ட விவரங்களை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Who Invented Internet First Time in Tamil:

Who Invented Internet First Time in Tamil

1970 ஆம் ஆண்டில் கணினி விஞ்ஞானிகளான விண்டன் செர்ஃப் மற்றும் ராபர்ட் கான் இணையத்தின் கண்டுபிடிப்பாளர்கள் என்று ஆராய்ச்சி பட்டியலில் கூறப்படுகிறது. ஏனென்றால், பல்வேறு நெட்வொர்க்குகளுக்கு இடையே தகவல் எவ்வாறு பகிரப்படுகிறது என்பதற்கான முறையான டிரான்ஸ்மிஷன் கண்ட்ரோல் புரோட்டோகால் மற்றும் இன்டர்நெட் புரோட்டோகால் (TCP/IP) ஆகியவற்றைக் கண்டுபிடித்தார்கள்.

இன்டர்நெட்டை ஒருவர் மட்டும் தான் கண்டுபிடித்தார் என்று குறிப்பிட்டு கூற முடியாது. ஏனென்றால், இன்டர்நெட்டை நிறைய கணினி விஞ்ஞானிகள், புரோகிராமர்கள், இன்ஜினியர் ஆகியோர் வெவ்வேறு கால இடைவெளியில் சேர்ந்து உருவாக்கி உள்ளார்கள்.

அதாவது, 1900 ஆம் ஆண்டு நிக்கோலா டெஸ்லா என்பவர் முதன் முதலில் World Wireless System என்ற அமைப்பை உருவாக்கி உலகம் முழுவதும் Communication பண்ணலாம் என்பதை கண்டுபிடித்தார்.

கடிகாரத்தை கண்டுபிடித்தவர்கள் யார்?

இவர் Mechanical Engineer, Electrical Engineer மற்றும் ஒரு கண்டுபிடிப்பாளரும் ஆவார்.

அதன் பிறகு, பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு விதமான features ஐ கண்டுபித்துள்ளளார்கள். ஆனால், 1900 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை இன்டர்நெட்டுக்கு முறையான ப்ரோட்டோகாலும் இல்லை.

அடுத்து, ஒரு அமெரிக்க உளவியலாளர் ஜேசிஆர் லிக்லைடர் (j. c. r. licklider) என்பவர் intergalactic network என்பதை கண்டுபித்தார். இதனை பல்வேறு அறிவியலாளர்கள் சேர்ந்து Packet Switched Network என்பதை கண்டுபித்தார்கள்.

அதாவது, எலெக்ட்ரானிக் டேட்டாவை Packet Switch method -ஐ பயன்படுத்தி transmit பண்ணலாம் என்று கண்டுபித்துள்ளார்கள். அதாவது, இன்டர்நெட் உருவாக அடிப்படை இந்த கண்டுபிடிப்பு என்றே கூறலாம்.

1960 ஆம் ஆண்டிற்கு பிறகு, the Military Government Agency 1 -st ப்ரோடோடைப் என்பதை கொண்டுவருகிறார்கள். இவர்கள் தான் Packet Switch method யூஸ் பண்ணி ஒரு இன்டர்நெட்டை ஒன்றிற்கு மேற்பட்ட கணினியுடன் இணைத்து செயல்படுத்தினார்கள். இதற்கு ARPANET என்று பெயர் வைத்தார்கள்.

இன்டர்நெட்டை மிலிட்டரி பயன்பாட்டிற்காக தான் கண்டுபிடித்தார்கள்.

அதன் பிறகு, 1970 ஆம் ஆண்டில் அறிவியலாளர்கள் விண்டன் செர்ஃப் மற்றும் ராபர்ட் கான் ஆகிய இருவரும் இணைந்து டிரான்ஸ்மிஷன் கண்ட்ரோல் புரோட்டோகால் மற்றும் இன்டர்நெட் புரோட்டோகால் (TCP/IP) ஆகியவற்றைக் கண்டுபிடித்தார்கள்.

அதன் பிறகு, இதுவரை கண்டுபிடித்த அணைத்து அம்சங்களையும் வைத்து இறுதியாக 1990 ஆம் ஆண்டில் டிம் பெர்னர்ஸ்-லீ (TIM BERNERS -LEE) என்ற கணினி விஞ்ஞானி World Wide Web (WWW) என்பதை உருவாக்கினார்.

அடுத்து, 1991 ஆம் ஆண்டு இன்டர்நெட்டை மக்கள் பயன்படுத்தவும் தொடங்கியுள்ளனர்.

School-ஐ கண்டுபிடித்தவர் இவர் தானா..? ஐயா உங்கள தான் இத்தனை நாளா தேடிக்கிட்டு இருந்தோம்

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement