Cadbury Chocolates in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்று நாம் அனைவரும் இந்த பதிவின் வாயிலாக ஒரு சுவாரஸ்யமான தகவலை தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அப்படி என்ன தகவல் என்று நீங்கள் யோசிப்பீர்கள். அதை தெரிந்து கொள்வதற்கு முன் உங்களுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்குமா..? அதுவும் சாக்லேட் என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது Dairy Milk தான். அதுவும் Dairy Milk புடிக்காதவர்கள் என்று யாராவது இருக்க முடியுமா..? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே Dairy Milk சாக்லேட்டை விரும்பி சாப்பிடுவார்கள். Dairy Milk சாக்லேட் கவரை நாம் அனைவருமே பார்த்திருப்போம். சரி Dairy Milk சாக்லேட் ஏன் ஊதா நிற கவரில் பேக் செய்யப்படுகிறது என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவின் வாயிலாக அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Dairy Milk சாக்லேட் ஏன் ஊதா நிற கவரில் பேக் செய்யப்படுகிறது..?
பொதுவாக Dairy Milk சாக்லேட்டை நாம் அனைவருமே பார்த்திருப்போம். அதை சுவைத்தும் இருப்போம். அப்படி Dairy Milk சாக்லேட் அனைத்தும் ஊதா நிற கவரில் பேக் செய்யப்பட்டிருக்கும். எத்தனையோ வண்ணம் இருந்தும் ஏன் ஊதா நிறம் மட்டும் பயன்படுத்தப்படுகிறது என்று நீங்கள் யோசித்தீர்களா..? அப்படி என்றால் அதை பற்றி இங்கு காணலாம்.
Dairy Milk சாக்லேட் கவரின் ஊதா நிறம் ஒரு நீண்ட நீதிமன்றப் போராட்டத்துடன் தொடர்புடையது. இது இனிப்பு மாபெரும் உலகப் புகழ்பெற்ற தயாரிப்புகளின் நிறத்தை இறுதி செய்தது.
அதுபோல Dairy Milk சாக்லேட் கவரின் மேல் Cadbury என்று எழுதியிருக்கும். இது Dairy Milk தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் ஆகும். Dairy Milk மட்டும் இல்லை அந்த நிறுவனமும் ஊதா நிறத்தில் தான் இருக்கும்.
சர்வதேச சாக்லேட் தினம் எப்போது |
காரணம், விக்டோரியா மகாராணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் 1914 ஆம் ஆண்டு முதல் கேட்பரி நிறுவனம் அவர்களின் போட்டியாளர்களிடமிருந்து அவர்களைத் திறம்பட வேறுபடுத்திக் காட்டும் வகையில், 1914 ஆம் ஆண்டு முதல் சின்னமான ஊதா நிறத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து 1920 ஆம் ஆண்டு தனிச்சிறப்பு வாய்ந்த ஊதா மற்றும் தங்க நிறங்களை ஏற்றுக்கொண்டது. பின் இந்த தனித்துவமான நிறத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக போட்டியாளரான நெஸ்லேவுடன் சட்டப்பூர்வ சர்ச்சையில் சிக்கியது.
பிறகு 2004 ஆம் ஆண்டில் ‘Pantone 2865c’ என்று பெயரிடப்பட்ட குறிப்பிட்ட நிழலை வர்த்தக முத்திரையிடுவதற்கு Cadbury முயன்றது. இதன் விளைவாக 2012 ஆம் ஆண்டில் நீதிபதி கொலின் பிர்ஸ் நெஸ்லே -வின் மேல்முறையீட்டை நிராகரித்தார். பின் மில்க் சாக்லேட்டுக்கான கேட்பரியில் ஊதா நிறம் தனித்தன்மை வாய்ந்தது என்பதை ஆதாரம் தெளிவாக ஆதரிக்கிறது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
எனவே Dairy Milk சாக்லேட் தயாரிக்கும் Cadbury நிறுவனம் ஊதா நிறத்தை வர்த்தக முத்திரையாக பயன்படுத்தி வருகிறது.
டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள் |
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |