Why Diesel Not Used in Bikes
பெரும்பாலும் நாம் அனைவரும் நம்முடைய வாகனமாக பயன்படுத்துவது சைக்கிள், பைக் மற்றும் கார் தான். இதற்கு அடுத்த நிலையாக தான் விமானம் மற்றும் ரயில் என இவற்றில் எல்லாம் பயணம் செய்கிறோம். இதன் படி பார்த்தால் முதலில் சொல்லப்பட்டுள்ள மூன்றினையும் நாம் நம்முடைய வீடுகளிலேயே வாங்கி உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால் இரண்டாவதாக சொல்லப்பட்டு இரண்டினையும் நாம் வாங்க முடியாது, நமக்கு தேவைப்பட்டால் அந்தந்த இடத்திற்கு சென்று தான் பயணம் செய்ய முடியும். இவற்றை எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தானே நீங்கள் இதில் என்ன சொல்ல வருகிறீர்கள், முதலில் அதை சொல்லுங்கள் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.
அதாவது இத்தகைய வாகனங்கள் அனைத்தும் நமக்கு தெரிந்தவையாக இருந்தாலும் கூட இதிலும் சில சந்தேகங்கள் இருக்கிறது. இதன் படி பார்த்தால் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றால் அதற்க்கு காற்று அவசியம். அதுவே பைக் ஓட்ட வேண்டும் என்றால் அதற்க்கு பெட்ரோல் அவசியம். இப்போது தான் இன்றைய பதிவிற்கான கேள்வியே எழுகிறது. அதாவது பெட்ரோல் பைக் இருப்பது போல டீசல் பைக் இல்லையே ஏன் தெரியுமா..? இத்தகைய கேள்விக்கான பதிலை நமது சிந்தனைக்கு உரிய Thinking பதிவு வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
ஏன் ரயில்வே ஸ்டேஷன் போர்டு மஞ்சள் நிறத்தில் இருக்கிறது தெரியுமா
பைக்கில் டீசல் பயன்படுத்தாதற்கான காரணம் என்ன தெரியுமா..?
பெட்ரோல் பைக் நாம் அதிகமாக பார்த்து இருப்பபோம். ஆனால் டீசல் பைக் நாம் பார்த்து இருப்பது கிடையாது. அப்படி பார்த்தால் பெட்ரோலை காட்டிலும் டீசல் அதிக மைலேஜ் கொடுப்பதாகவும், விலை குறைவானதாகவும் இருக்கிறது.
இப்படி இருந்தும் கூட டீசல் பைக் வராமல் இருப்பதற்கான காரணமாக சிலவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- பைக்கில் டீசல் பயன்படுத்தினோம் என்றால் அதனை சாதாரணமாக பற்ற வைக்க மாட்டார்கள். அதற்கு மாறாக அதிகமாக காற்று மற்றும் அழுத்தத்தை கொடுத்து அதன் வழியாக ஏற்படும் அதிகமான வெப்பத்தினால் தான் பற்ற வைப்பார்கள்.
- இவ்வாறு அழுத்தம் அதிகமாக கொடுப்பதனை தாங்க வேண்டும் என்பதற்காக அதிக எடை உள்ள இன்ஜினை தான் பயன்படுத்துவார்கள். இதனால் பைக் அதிக எடை உள்ளதாகவும், பெரிய வடிவிலும் காணப்படும்.
- மேலும் டீசல் பைக்கில் வேகம் குறைந்து காணப்படும். இத்தகைய காரணத்தினாலும் டீசல் பைக் பயன்படுத்துவது இல்லை.
- அது மட்டும் இல்லாமல் டீசல் பைக்கில் அதிகமாக சத்தம் வந்து கொண்டே இருக்கும்.
- டீசல் பைக்கிற்கு விலை உயர்ந்த இன்ஜின் பயன்படுத்தும் காரணத்தினால் டீசல் பைக்கின் விலையும் அதிகமாக காணப்ப்படும். மேலும் பெட்ரோல் பைக்கை காட்டிலும் அளவுக்கு அதிகமாக சர்வீஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
மேலே சொல்லப்பட்டுள்ள காரணங்களினால் தான் பெரும்பாலும் டீசல் பைக் தயாரிக்கப்படுவது இல்லை.
கேஸ் சிலிண்டரில் இந்த நம்பரை செக் பண்ணிட்டு வாங்குங்க..
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |