ஏன் ஜூலை மற்றும் ஆகஸ்டில் தொடர்ச்சியாக 31 நாட்கள் வருகிறது.?

Advertisement

Why is July and August Has 31 Days in Tamil

ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் என்றும், 12 மாதங்கள் என்றும், தோரயமாக 52 வாரங்கள் என்றும், ஒரு வாரம் 7 நாட்கள் என்றும் 1 நாள் 24 நாள் நேரம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதன் படி, மாதங்களை பொறுத்தவரை 30, 31 என வரும். பிப்ரவரி மாதம் மட்டும் 28 நாட்கள் இருக்கும். இதில் பெரும்பாலனவர்களுக்கு பிப்ரவரில் மட்டும் ஏன் 28 நாட்கள் இருக்கிறது என்ற குழப்பம் இருக்கும். அதேபோல், சிலருக்கு ஏன் ஜூலை மற்றும் ஆகஸ்டில் தொடர்ச்சியாக 31 நாட்கள் வருகிறது.? குழப்பமும் இருக்கும். ஓகே வாருங்கள் அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொன்றிற்கும் ஒரு வரலாறு இருக்கும். அதேபோல் ஜூலை மற்றும் ஆகஸ்டில் தொடர்ச்சியாக 31 நாட்கள் வருவதற்கும் ஒரு வரலாற்று காரணம் உள்ளது. அதன்படி,  ஜூலை மற்றும் ஆகஸ்டில் தொடர்ச்சியாக 31 நாட்கள் வருவதற்காக வரலாற்று காரணங்களை பின்வருமாறு பார்க்கலாம்.

HighWay -ல இருக்கிற இந்த BOX எதுக்காக வச்சிருக்காங்க தெரியுமா.?

ஏன் ஜூலை மற்றும் ஆகஸ்டில் தொடர்ச்சியாக 31 நாட்கள் வருகிறது.?

பல வருடங்களுக்கு முன்பு ஜூலை ஆகஸ்ட் என்ற இரண்டு மாதங்களும் கிடையாது. நம் அனைவருக்குமே ஜூலியஸ் சீசர் என்ற பேரரசரை தெரியும். இவர்தான் ரோமானியப் பேரரசை ஆண்டவர். இதுபோன்ற அவரின் பல்வேறு விதமான வரலாறுகளை பற்றி தெரிந்திருப்போம். ரோமானிய பேரரசை ஆண்ட ஜூலியஸ் சீசர் நினைவாக தான் ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது. மேலும், இம்மாதத்தில் கூடுதல் நாட்கள் இருக்க வேண்டும் என்பதற்காக 31 நாட்கள் கொடுக்கப்பட்டது.

Why is July and August Has 31 Days in Tamil

அதன் பிறகு, ஜூலியஸ் சீசரின் மருமகன் அகஸ்டஸ் சீசர் ரோமானியப் பேரரசைக் கைப்பற்றியபோது, ​​அவரின் நினைவாக ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டது. மேலும், அவர் தனது பெயரால் பெயரிடப்பட்ட ஆகஸ்ட் மாதமும் 31 நாட்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் தான் ஆகஸ்ட் மாதத்திலும் 31 நாட்கள் கொடுக்கப்பட்டது.

ஆகவே, ரோமானிய தலைவர்களின் பெயரால் பெயரிடப்பட்ட இந்த மாதங்களுக்கு அவற்றின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்க 31 நாட்கள் வழங்கப்பட்டது. எனவே, இரண்டு கூடுதல் நாட்கள் பிப்ரவரியில் இருந்து எடுக்கப்பட்டது, பின்னர் அது 28 நாட்கள் என கணக்கிடப்பட்டது.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் 28 நாட்கள் இருப்பது ஏன் தெரியுமா?

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement