திருடாததற்கு காரணம் என்ன
வாசகர்களுக்கு வணக்கம்..! நம் அனைவருக்குமே வெளியூர் பயணம் என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி வெளியூர் பயணங்களை அனைவரும் விரும்புவதற்கு முக்கிய காரணம் பஸ், ட்ரெயின் தான். நாம் அனைவருமே பஸ், ட்ரெயின் என்று அனைத்திலும் சென்றிருப்போம். அதில் மிகவும் பிடித்தது என்றால் அது ரயில் பயணம் தான். அவ்வளவு ஏன் நம் அனைவருக்குமே ரயில் பயணம் என்றால் அவ்வளவு பிடிக்கும். அப்படி ரயிலில் செல்லும் போது இந்த விஷயத்தை கவனித்திருக்கிறீர்களா..? அதாவது ரயிலில் இருக்கும் ஃபேன் மற்றும் பல்புகளை நாம் அனைவருமே பார்த்திருப்போம். ஆனால் அப்படி ரயிலில் இருக்கும் பொருட்களை திருடர்கள் திருட மாட்டார்களாம்..? அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
மேரி பிஸ்கட்டில் ஓட்டை இருக்க காரணம் என்ன தெரியுமா
ரயிலில் இருக்கும் பல்பு மற்றும் ஃபேனை திருடாததற்கு காரணம் என்ன..?
பொதுவாக திருடர்கள் என்றால் நம் அனைவருக்குமே கொஞ்சம் பயமாக தான் இருக்கும். நம் வீட்டின் வெளியே சைக்கிள் நின்று கொண்டிருந்தால் கூட அதை திருடி சென்று விடுவார்கள்.
அவ்வளவு ஏன் பழுதாகி போன பொருட்களை கூட விட்டு வைக்கமாட்டார்கள். பூட்டி இருக்கும் வீட்டில் கூட புகுந்து திருடுகிறார்கள். அப்படி இருக்கையில் பலரும் திருடர்களுக்கு பயந்து வீடு, கடைகள், வாகனங்கள் என்று அனைத்திற்கும் பல பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.
ஆனால் ரயிலில் மட்டும் இந்த தொல்லை கிடையாது. அதாவது ரயிலில் இருக்கும் பொருட்களை திருடர்கள் திருடுவதில்லை. அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காணலாம்.
பொதுவாக நம் வீடுகளில் பயன்படுத்தும் சாதனங்கள் எல்லாம் 230 வோல்ட் கரண்டில் இயக்கப்படுகின்றன. ஆனால் ரயிலில் அப்படி கிடையாது. ரயிலில் பயன்படுத்தும் சாதனங்கள் எல்லாமே 110 வோல்ட் கரண்டில் தான் இயக்கப்படுகின்றன.
விமானத்தில் பயணிக்கும் போதும் மொபைலை Airplane Mode-ல் போட சொல்றாங்களே ஏன்னு தெரியுமா
நீங்கள் ரயிலில் செல்லும் போது, உங்கள் போனிற்கு சார்ஜ் போடும் போது அங்கு இருக்கும் பிளாக் பாயிண்டிற்கு அருகில் 110 வோல்ட் என்று குறிப்பிட்டிருக்கும்.
ரயில்களில் இருக்கும் அனைத்து கோட்ச்களுக்கு பேட்டரி மூலம் தான் பவர் செலுத்தப்படுகிறது. இது TC கரெண்டை AC கரெண்டாக மாற்றி, ரயிலில் உள்ள ஃபேன், பல்ப் மற்றும் சார்ஜ் போடும் பிளக் பாயிண்ட்களுக்கு எல்லாம் பவர் செலுத்தப்படுகிறது.
ரயில் பொருட்களை திருடர்கள் திருடாததற்கு காரணம்:
ரயில் பயணம் என்பது எவ்வளவு பெரியது என்று நமக்கு தெரியும். அதில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். அதில் சில திருடர்களும் இருக்கிறார்கள்.
அப்படி திருடர்கள் ரயிலில் இருக்கும் ஃபேன் மற்றும் பல்புகளை திருட கூடாது என்பதற்காக தான் 110 வோல்ட் கரண்ட் கொடுக்கிறார்கள். காரணம், 110 வோல்ட் கரண்டில் இயக்கப்படும் ஃபேன் மற்றும் பல்ப் போன்ற கருவிகளை திருடி வெளியே எங்கும் விற்க முடியாது. அதை பயன்படுத்தவும் முடியாது.
கேஸ் சிலிண்டரில் இந்த நம்பரை செக் பண்ணிட்டு வாங்குங்க..
இதுபோன்ற 110 வோல்ட் கரண்டில் பயன்படுத்தப்படும் பொருட்களை ரயில்வே சார்ந்த இடங்களில் மட்டும் தான் பயன்படுத்த முடியும். இதனால் தான் ரயில்வே நிர்வாகம் இப்படி ஒரு திட்டத்தை பயன்படுத்துகிறார்கள்.
இந்த ரகசியம் தெரிந்ததால் தான் திருடர்கள் ரயிலில் மட்டும் அவர்களின் கைவரிசையை காட்டாமல் இருக்கிறார்கள்.
ஏன் ரயில்வே ஸ்டேஷன் போர்டு மஞ்சள் நிறத்தில் இருக்கிறது தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |