Marie Biscuit Facts in Tamil
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் காலையில் தூங்கி எழும் போது நம்மை அன்போடு வரவழைப்பது டீ தான். தூங்கி எழுந்ததும் 1 கப் டீ குடிக்கவில்லை என்றால் அந்த நாளே ஓடாது. அதிலும் சிலர் டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவார்கள். அவ்வளவு ஏன் சிறியவர்கள் பெரியவர்கள் என்று அனைவரும் டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவது வழக்கம். அப்படி நாம் சாப்பிடும் பிஸ்கட் வகைகள் எவ்வளவோ இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வீட்டிற்கு ஏதும் மளிகை சாமான் வாங்கப்போனால் பிஸ்கட் வாங்காமல் யாரும் வருவதில்லை. அப்படி நாம் விரும்பி உண்ணும் பிஸ்கட்களில் ஓன்று தான் இந்த மேரி பிஸ்கட். இந்த பிஸ்கட்டில் ஓட்டை இருக்க என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளாலாம் வாங்க.
விமானத்தில் பயணிக்கும் போதும் மொபைலை Airplane Mode-ல் போட சொல்றாங்களே ஏன்னு தெரியுமா
மேரி பிஸ்கட்டில் ஓட்டை இருக்க இது தான் காரணமா..?
பொதுவாக நாம் விரும்பி உண்ணும் பிஸ்கட்களில் மேரி கோல்டு பிஸ்கட்டும் ஓன்று. இந்த பிஸ்கட்டை நாம் அனைவருமே பார்த்திருப்போம். அவ்வளவு ஏன் 6 மாத குழந்தையின் உணவு பொருளாக இந்த மேரி பிஸ்கட் இருந்து வருகிறது.
அப்படி அனைவரும் வாங்கி டீயுடன் சுவைத்த மேரி பிஸ்கட்டில் ஓட்டை ஓட்டையாக இருப்பதை நாம் பார்த்திருப்போம். அப்படி பார்க்கையில் என்றாவது ஏன் இப்படி ஓட்டை இருக்கிறது என்று யோசித்தது உண்டா..?
அப்படி யோசித்திருந்தால் அதற்கான காரணத்தை இங்கு காணலாம்.
கேஸ் சிலிண்டரில் இந்த நம்பரை செக் பண்ணிட்டு வாங்குங்க..
பொதுவாக நாம் சாப்பிடும் பிஸ்கட்கள் எல்லாமே மைக்ரோஅவன் போன்றவற்றில் செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பிஸ்கட்கள் அனைத்துமே கோதுமை மற்றும் மைதா போன்ற மாவுகளில் செய்யப்படுகிறது. இப்படி இருக்கையில் நாம் கோதுமை மைதா போன்ற மாவுகளில் செய்யப்பட்ட பொருட்களை மைக்ரோ அவனில் வைக்கும் போது அது காற்றை வெளியேற்றும். ஒருவேளை காற்று வெளியே செல்லவில்லை என்றால், பிஸ்கட்டில் குமிழ் போல தோன்றும். இதனால் பிஸ்கட் பார்ப்பதற்கு நன்றாகவே இருக்காது. இதனால் தான் மேரி பிஸ்கட்டில் ஓட்டை போடுகிறார்கள்.
மேரி பிஸ்கட் மட்டுமில்லாமல், வட்ட வடிவிலான அனைத்தும் பிஸ்கட்டிலும் ஓட்டை கண்டிப்பாக இருக்கும். ஆனால் சிறிய சதுர வடிவில் செய்யப்பட்ட பிஸ்கட்டில் ஓட்டை இருக்காது. காரணம் சிறிய வடிவில் செய்யப்பட்ட பிஸ்கடில் காற்று வெளியேறிவிடும்.
எனவே காற்று வெளியேறாது என்பதால் தான் மேரி பிஸ்கட்டில் ஓட்டை இருக்கிறது.
ஏன் ரயில்வே ஸ்டேஷன் போர்டு மஞ்சள் நிறத்தில் இருக்கிறது தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |