நம் முன்னோர்கள் பருவமடைந்த பெண்களை பாவாடை தாவணி அணிய சொன்ன ரகசியம்,உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

நம் முன்னோர்களின் காலத்தில் பாவாடை தாவணி, புடவை அணிய சொன்ன ரகசியம் 

நம் முன்னோர்களின் காலத்தில் பருவமடைந்த பெண்கள் பாவாடை தாவணி தான் அணிந்திருப்பார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பாவாடை தாவணி அணிந்து பார்த்ததில்லை. ஏனென்றால் இந்த காலத்தில் சுடிதார், பேண்ட் ஷர்ட் என்று போடுகிறார்கள். நம் முன்னோர்கள் எந்த விஷயத்தையுமீ காரணம் இல்லாமல் ஒரு பழக்கத்தை கொண்டு வர மாட்டார்கள். அதில் ஒன்றாக தான் பாவாடை தாவணி விஷயமும் இருக்கிறது. அதனால் இந்த பாவாடை தாவணியில் உள்ள ஏரகஸ்யாயத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

பாவாடை தாவணி ரகசியம்:

நம் முன்னோர்களின் காலத்தில் பாவாடை தாவணி அணிய சொன்ன ரகசியம் 

பெண்கள் பருவம் அடைந்த பிறகு கர்ப்பப்பை மற்றும் தொப்புள் பகுதியில் காற்றோட்டம்  என்பதற்காக தான் நம் முன்னோர்கள் பாவாடை தாவணி மற்றும் சேலை கட்டும் பழக்கத்தை கொண்டு வந்தார்கள்.

பாவாடை தாவணி அணிவதால் கர்ப்பப்பை உள்ள இடமானது அதிக ஹீட் இல்லாமல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் உள்ளவர்கள் அந்த இடத்தை காற்றோட்டமாக வைத்திருக்காமல் நாகரிக ஆடைகளான ஜீன்ஸ், சுடிதார் போன்றவற்றை அணிகிறார்கள்.

கேஸ் சிலிண்டரில் இந்த நம்பரை செக் பண்ணிட்டு வாங்குங்க..

இந்த மாதிரி ஆடைகள் அணிவதால் உஷ்ணம் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமில்லாமல் நம் முன்னோர்களின் காலத்தில் மண் தரை தான் இருந்தது. அதை சாணம் இட்டு மொழுவுவார்கள். இப்படி வேலை செய்யும் போது நமது வயிறு அழுத்தப்படுகிறது. இதனால் இடுப்பு எலும்புகள் வலுப்படும். மேலும் அம்மி அரைப்பார்கள், குட கல்லில் மாவு அரைத்தார்கள். இவை உடற்பயிற்சியாக இருந்தது.

ஆனால் இன்றைய காலத்தில் உட்கார்ந்த இடத்திலிருந்து நகராமல் கணினியில் வேலை பார்க்கின்றார்கள். இதனால் உடலிற்கு தேவையான இரத்த ஓட்டம் சரியாக செல்லவில்லை. மேலும் நைட் டூட்டி பார்ப்பதால் உடலில் ஹீட் அதிகரிக்கிறது.

நீங்கள் எப்போதும் பாவாடை தாவணி அல்லது புடைவை கட்ட முடியாது என்றால் எப்போதாவது சுப நிகழ்ச்சி அல்லது விழாக்கள் போன்றவற்றில் ஆவது புடவை கட்ட முயற்சியுங்கள்.

பெண்களுக்கு கர்ப்பப்பை ரொம்ப முக்கியமானது. உங்களுடைய கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கிறது என்றால் உங்களுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். அதனால் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

ஏன் ரயில்வே ஸ்டேஷன் போர்டு மஞ்சள் நிறத்தில் இருக்கிறது தெரியுமா 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 

Advertisement