தீபாவளி ஸ்பெஷல் பெசன் லட்டு
தீபாவளி நெருங்கி வரும் வேளையில், புதுப்புது பலகார வகைகளை செய்து நமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் வழங்குவது நமது பண்பாடு. அனைத்து வருடமும் ஒரே மாதிரியான பலகாரங்கள் தயாரித்து நமக்கு அலுத்துப்போய் இருக்கும். தீபாவளி என்றாலே ஞாபகத்திற்கு வருவது புது ஆடைகள், மத்தாப்புகள், பலகாரங்கள் தான். பலகாரங்களில் ஒன்று லட்டு. லட்டு பல வகைகள் உள்ளது. நாம் எல்லா வகைகளையும் ருசித்து இருக்க மாட்டோம்.
லட்டு ஒரு சிறந்த ஆரோக்கியமான சிற்றுண்டி ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பலகாரம் லட்டு. லட்டில் பலவகைகள் உள்ளது. அவற்றில் ஒன்றான கடலை மாவு லட்டு ( பெசன் லட்டு )எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். அனைத்து வருடம் போல் இல்லாமல் இந்த வருடம் புது முயற்சியாக கடலை மாவு லட்டு ( பெசன் லட்டு )செய்து அனைவருக்கும் வழங்கி சந்தோசம் அடையுங்கள். வாருங்கள் பதிவிற்கு செல்லலாம்.
தீபாவளி ஸ்பெஷல் பெசன் லட்டு செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 3/4 கப்
ஏலக்காய் – 2
துருவிய பாதாம் – தேவைக்கேற்ப
நெய் – தேவைக்கேற்ப
பெசன் லட்டு செய்முறை:
முதலில் சர்க்கரை மற்றும் ஏலக்காயை அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
பின்னர் கடலை மாவை மிதமான சூட்டில் வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் வறுத்த கடலை மாவு, அரைத்த சர்க்கரை ஏலக்காய் தூள் மற்றும் நறுக்கிய முந்திரியை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
பின்னர் அந்த மாவில் நெய் சேர்த்து உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.
இப்போது சுவையான பெசன் லட்டு ரெடி.
இந்த வருட தீபாவளிக்கு உலகின் சிறந்த இனிப்பு வகையான பெசன் லடூ தயாரித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கி மகிழுங்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |