வீடு துடைக்க கஷ்டமா இருக்கா..! இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்க இனி கஷ்டமே இருக்காது

Advertisement

வீடு துடைப்பது

தினமும் வீடு துடைப்பது என்பது அனைத்து பெண்களுக்கும் ஒரு போராட்டமாக இருக்கிறது. அத்தகைய வீடு துடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் சுத்தமாக வீடு துடைக்க வேண்டும் மற்றும் துறுநாற்றம் வீசாமல் இருக்க வேண்டும் என்று பல பிரச்சனைகள் இருக்கிறது. ஆகையால் இன்றைய பதிவில் வீடு துடைக்கும் போது Follow பண்ண வேண்டிய டிப்ஸ் என்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த பதிவானது வீடு சுத்தம் செய்வதற்கு கஷ்டப்படும் பெண்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும். சரி வாங்க அந்த டிப்ஸ் என்ன தான் என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

தரையை சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  1. கல் உப்பு- 1 ஸ்பூன்
  2. கற்பூரம்- 1
  3. Dettol- 1 ஸ்பூன்
  4. ஷாம்பு- 1 ஸ்பூன்
  5. சமையல் சோடா- 1/2 ஸ்பூன்

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

வீடு துடைப்பது எப்படி.?

 

குறிப்பு- 1

வீடு துடைப்பது

முதலில் நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் ஒட்டடைகளை சுத்தம் செய்து விடுங்கள். அதன் பிறகு ஒரு வாளியில் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அந்த தண்ணீரில் கல் உப்பு 1 ஸ்பூன், Dettol 1 ஸ்பூன்  மற்றும் 1 கற்பூரத்தை பொடியாக்கி அதில் போட்டு நன்றாக தண்ணீரை கலந்து விடுங்கள். அடுத்து முக்கியமாக நீங்கள் வீடு துடைப்பதற்கு முன்பு உங்கள் வீட்டில் இருக்கும் மின்விசிறியை Off செய்து விடுங்கள்.

அடுத்து நீங்கள் வாளியில் கலந்து வைத்துள்ள தண்ணீரால் உங்களுடைய வீடு முழுவதையும் நன்றாக துடைத்து விடுங்கள். அதன் பிறகு சுத்தமான தண்ணீரால் மீண்டும் ஒரு முறை வீட்டை துடைத்து விடுங்கள்.

இதுபோல நீங்கள் ஒரு முறை வீடு துடைத்தால் போதும் வீடு துடைக்க கஷ்டமே இருக்காது மற்றும் வீட்டிற்கு எந்த பூச்சிகளும் வராது. 

டாய்லெட்டில் கரப்பான் பூச்சி மற்றும் நாற்றம் வராமல் பிரஷ்ஷாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க

குறிப்பு- 2

house cleaning tips in tamil

வீடு துடைத்து முடித்த பிறகு 1 கப் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் 1 ஸ்பூன் ஷாம்பு கலந்து உங்களுடைய வீடு முழுவதும் தெளித்து விட்டு மீண்டும் ஒரு முறை வீட்டை துடைத்து விடுங்கள்.

இது மாதிரி செய்தால் வீட்டில் எப்போதும் துர்நாற்றம் வீசாமல் வீடு முழுவதும் மணம் வீசிக்கொண்டே இருக்கும் மற்றும் தரையும் புதியது போல பளபளக்கும்.

குறிப்பு- 3

house cleaning tips and tricks in tamil

கடைசியாக நாம் பார்க்கப்போகும் குறிப்பு என்னவென்றால் வீடு துடைத்த பிறகு தெரியாமல் டீ, காபி போன்ற கறைகள் பட்டு இருக்கும். அந்த கறைகளை எளிதில் நீக்குவதற்கு முதலில் 1 கப் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு அந்த தண்ணீருடன் 1 ஸ்பூன் ஷாம்பு மற்றும் 1/2 ஸ்பூன் சமையல் சோடா சேர்த்து கலந்து ஒரு துணியால் கறை உள்ள இடத்தில் துடைத்தால் போதும் நொடியில் கறை போகிவிடும். 

இந்த மூன்று குறிப்புகளை நீங்கள் Follow செய்தால் போதும் வீடு துடைக்கவும் ஈஸியாக இருக்கும், பூச்சிகளும் வராது மற்றும் தரையும் பளபளக்கும்.  

இதையும் படியுங்கள்⇒ ஒட்டடை அடிப்பதில் இப்படி ஒரு Tricks இருக்கா தெரியாம போச்சே..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement