Easy Way to Bathroom Door Cleaning in Tamil
பொதுவாக நாம் வாழும் இடத்தை அல்லது வீட்டை சுத்தமாக பராமரித்தால் மட்டுமே நமது உடல் நலத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. அதனால் நாம் வாழும் இடத்தை எப்பொழுதும் சுத்தமாக பராமரிப்பது நமது முக்கியமான கடமையாகும். அதிலும் குறிப்பாக நாம் பயன்படுத்தும் குளியலறை மற்றும் கழிவறையை மிக மிக கவனத்துடன் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
ஆனால் நம்மில் பலருக்கும் அவற்றை சுத்தமாக பாராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகவே உள்ளது. அதனால் தான் இன்றைய பதிவில் உங்க வீட்டு பாத்ரூம் கதவுகளில் உள்ள உப்பு கறையை போக்க உதவும் மிகவும் எளிமையான ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Tips for Bathroom Door Cleaning in Tamil:
உங்க வீட்டு பாத்ரூம் கதவுகளில் உள்ள உப்பு கறையை போக்க உதவும் மிகவும் எளிமையான ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக காணலாம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.
- வினிகர் – 1 கப்
- தண்ணீர் – 1/2 கப்
- எலுமிச்சை பழச்சாறு – 4 டேபிள் ஸ்பூன்
- பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்
- சலவைத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் வினிகர் மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை பழச்சாற்றினை சேர்க்கவும்:
அடுத்து அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டு பாத்ரூம் கதவுகளில் உள்ள அனைத்து கறைகளை போக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்
பேக்கிங் சோடாவை கலக்கவும்:
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
சலவைத்தூளை சேர்த்து கொள்ளவும்:
இறுதியாக இவற்றுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் சலவைத்தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்கள் பாத்ரூம் கதவுகளில் ஸ்ப்ரே செய்து 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து ஒரு ஈரத்துணியை அல்லது Scrubber பயன்படுத்தி துடைத்தீர்கள் என்றால் அனைத்து கறைகளும் நீங்கி விடும்.
இதனை ஒரே ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் உங்களுக்கே தெரியும் இது எந்த அளவுக்கு பயனுள்ள குறிப்பு என்பது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டு பாத்ரூமில் உள்ள அனைத்து உப்புக்கறைகளையும் நீங்க இதை ட்ரை பண்ணுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |