செப்டிக் டேங்க் எப்படி கட்ட வேண்டும்
வீடு கட்டும் போது தண்ணீர் தொட்டி அமைப்பதில் அதிக கவனம் செலுத்தும் நிலையில் கழிவு நீரை வெளியேற்ற செப்டிக் டேங்க் அமைக்கவும் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் குறுகிய காலத்தில் டேங்க் நிரம்பி விடும். இதனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக கட்டுவார்கள். இந்த பதிவில் எப்படி கட்டுவது சிறந்தது என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உர கல்லில் கட்டுவது:
வீட்டின் செப்டிங்க் டேங்க் பலரும் உரைகளை வைத்து கட்டுகிறார்கள. இதனை பயன்படுத்தி கட்டும் பொழுது செலவு வேண்டுமானால் குறைவாக இருக்கலாம், ஆனால் இதில் செலவுகளை அதிகப்படுத்தும். அதில் முதலாவதாக அடிக்கடி நிரம்பி விடும், அடுத்து உரக்கல்லில் சேதத்தை ஏற்படுத்தும், இதற்கு நீங்கள் அடிக்கடி செலவு செய்ய வேண்டியிருக்கும்.
செங்கலில் கட்டுவது:
செங்கல் பயன்படுத்தி செப்டிங்க் டேங்க் கட்டுவது காசுஅதிகமாக செலவு ஆகலாம், ஆனால் இவற்றில் நிரம்பும் பிரச்சனை இருக்காது. அது போல சேதமும் ஆகாது. இதில் பலரும் செய்ய கூடிய தவறு என்னவென்றால் உள்பக்கம் பூச மாட்டுகிறார்கள். இப்படி இருப்பதால் தண்ணீரானது பூமிக்குள் உள்வாங்கி விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் மழைக்காலத்தில் சீக்கிரமே செப்டிங்க் டேங்க் நிரம்பி விடும். அதனால் உள்பக்கத்தை பூசி விட வேண்டும்.
போர் இருக்கும் இடத்தில் பக்கத்திலேயே செப்டிங்க் டேங்க் கட்டி விடுகிறார்கள். இது மாதிரி செய்தாலும் செப்டிங்க் டேங்க் நிரம்பி விடும். அதனால் போர் இருந்தால் அத்ற்கு 10 அடி நீளத்தில் தான் கட்ட வேண்டும்.
எப்படி கட்ட வேண்டும்:
நீங்கள் செப்டிங்க் டேங்கை செங்கல்லால்நனவு புறமும் கட்டி விட வேண்டும், அதன் பிறகு நான்கு புறமும் பூசி விட வேண்டும். கீழயும் சரி மேலயும் சரி கான்கிரீட் போட வேண்டும். இப்படி இருந்தால் தான் கழுவு நீர் நிலத்தடிக்கு செல்லாமல் சுற்றுசூழல் மாசுபாடு அடையாமல் இருக்கும்.
அடுத்து இதில் மேல் பகுதியில் ஓபன் டோர் வைக்க வேண்டும். இதனை வைப்பதால் கழுவி நீரை வெளியே எடுப்பதற்கு உதவியாக இருக்கும். செப்டிங்க் டேங்கில் நான்கு புறம் வைத்து கட்டுவதோடு நடுவில் champer முறையில் கட்ட வேண்டும். இப்படி கட்டுவதால் திட கழிவுகள் ஒரு புறமும், திரவ கழிவுகள் ஒரு புறமும் இருக்கும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |