How to Find Original Saffron in Tamil
“குங்குமப்பூ குரோக்கஸ்” என்று அழைக்கப்படுகிறது. இது உலகிலேயே மிகவுயர்ந்த வாசனைமிக்க உணவுப்பொருளாகவும் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் குங்குமப்பூ காஷ்மீரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் எண்ணற்ற சத்துக்கள் அடைந்துள்ளது. இதனை தயாரிப்பது மிகவும் பெரிய வேலை. க்ரோகஸ் சாவடிஸ் தாவரத்தின் பூக்களில் இருந்து நார்களை பிடித்தெடுத்து அதன் மூலம் குங்குமப்பூ தயாரிக்கப்படுகிறது.
குங்கும பூ விலை உயர்ந்தது என்று அனைவர்க்கும் தெரியும். அப்படி நாம் அதிக விலை கொடுத்து வாங்கும் குங்குமப்பூ உண்மையாகவே ஓரிஜினல்தானா என்பதை அறிந்து வாங்குவது நல்லது. ஏனென்றால் இக்காலத்தில் அணைத்து பொருட்களிலும் கலப்படம் உள்ளது. ஆகையால், நாம் அதிக விலை கொடுத்து வாங்கும் குங்குமப்பூ ஓரிஜினல் என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
How to Check Original Saffron in Tamil:
வாசனை:
குங்குமப்பூவின் வாசனையை வைத்து ஓரிஜினலா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். அதாவது, குங்குமப்பூ வாங்கி வந்ததும் அதனை திறந்து நுகர்ந்து பாருங்கள். அதன் வாசனை கிட்டத்தட்ட தேன் போன்ற மணம் இருந்தால் அது ஓரிஜினல் குங்குமப்பூ.
குங்குமப்பூ எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று தெரியுமா..?
சுவை:
குங்குமப்பூவை சுவைத்து பார்த்து ஓரிஜினலா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். அதாவது, குங்குமப்பூவின் சுவை இனிப்பாக இருந்தால் அது ஓரிஜினல் இல்லை. ஆமாம், குங்குமப்பூவின் வாசனை மட்டும்தான் இனிப்பு போன்று இருக்கும். அதன் சுவை இனிப்பாக இருக்காது.
தண்ணீர்:
முதலில் சிறிதளவு சூடான தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அதில், சில குங்கும இதழ்களை போட்டு விடுங்கள். தண்ணீரில் போட்டதும் தண்ணீர் தங்கமாக மாறும். அதுமட்டுமில்லாமல் அதிலிருந்து தொடர்ந்து 24 மணிநேரமும் வண்ணம் வந்துகொண்டே இருக்கும். அப்படி இருந்தால் அது ஓரிஜினல் குங்குமப்பூ.
பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து அதில், குங்குமப்பூ சேர்த்து கலந்துவிட்டால் உடனே மஞ்சளாக மாறும். அவ்வாறு மாறினால் அது ஒரிஜினல். அப்படி இல்லாமல், தண்ணீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறினால் போலியானது.
நீங்கள் வாங்கும் கருங்காலி மாலை ஒரிஜினல் மாலை தானா என்பதை இப்படி தான் கண்டுபிடிக்க வேண்டும்..
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |