வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

How to Kill Cockroaches at Home Permanently in Tamil

தினமும் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் பயனுள்ள குறிப்புகள் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையை போக்குவதற்காக சில எளிமையான குறிப்புகள் பற்றி பார்க்க இருக்கின்றோம். உங்களின் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக இருந்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் வரும். எனவே உங்கள் வீட்டில் உள்ள கரப்பான் பூச்சிகளை நிரந்தரமாக போக்க வேண்டுமா..? அப்படியென்றால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

How to Kill Cockroach at Home in Tamil:

Cockroach Killer at Home in Tamil

கரப்பான் பூச்சிகளினால் நமது உடலுக்கு பல தீங்குகள் விளைவிக்க கூடும். எனவே முதலில் அதனை உங்கள் வீட்டிலிருந்து அகற்றுங்கள். அதற்கான சில குறிப்புகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

முதலில் அதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. எலுமிச்சை பழம் – 3
  2. டெட்டால் (Dettol) – 2 டேபிள் ஸ்பூன் 
  3. சூடம் – 6
  4. தண்ணீர் – தேவையான அளவு 

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 3 எலுமிச்சை பழங்களையும் இரண்டாக நறுக்கி அதில் உள்ள விதைகளை நீக்கி விட்டு சாற்றினை மட்டும் பிழிந்து  கொள்ளவும். பின்னர் அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் டெட்டால் மற்றும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து  கொள்ளுங்கள்.

பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 6 சூடத்தை நன்கு பொடியாக செய்து சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்கள் வீட்டில் எங்கெல்லாம் கரப்பான் பூச்சி அதிகமாக வருகிறதோ அங்கெல்லாம் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.

இதனை வாரத்தில் இருமுறை செய்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது.

இதையும் படித்துப்பாருங்கள்=> டாய்லெட்டில் கரப்பான் பூச்சி மற்றும் நாற்றம் வராமல் பிரஷ்ஷாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க

Cockroach Killer at Home in Tamil:

How to Kill Cockroach at Home in Tamil

முதலில் அதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. போரிக் ஆசிட் பவுடர் (Boric Acid) – 3 டேபிள் ஸ்பூன் 
  2. சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்  
  3. தண்ணீர் – தேவையான அளவு 

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 3 டேபிள் ஸ்பூன் போரிக் ஆசிட் பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிய உருண்டைகளாக பிடித்து உங்கள் வீட்டில் எங்கெல்லாம் கரப்பான் பூச்சி அதிகமாக வருகிறதோ அங்கெல்லாம் வையுங்கள்.

இதனை இரவு வைத்தீர்கள் என்றால் அடுத்த நாள் காலை உங்கள் வீட்டில் உள்ள கரப்பான் பூச்சிகள் அனைத்தும் அழிந்து விடும். குறிப்பாக இந்த உருண்டைகளை உணவு பொருட்கள் உள்ள இடத்தில் மட்டும் வைத்து விடாதீர்கள்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil