2 நிமிடத்தில் புளித்த மாவை புதிய மாவு போல் ஆக்கலாம்..!

Advertisement

புளித்த மாவை சரி செய்வது எப்படி.?

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் புளித்த மாவை உடனே சுவையான இட்லி, தோசை செய்து எப்படி சாப்பிடுவது என்று தெரிந்துகொள்வோம். புதிதாக அரைத்த மாவு ஒரு நாளுக்கு தான் சுவையாக இருக்கும். மறு நாள் அந்த மாவை ஊத்தி சாப்பிடவே முடியாது. புளித்த மாவை யாரும் பயன்படுத்த மாட்டார்கள். புளித்த மாவை கீழே தான் ஊற்றுவார்கள். இனிமேல் புளித்த மாவை Waste செய்ய வேண்டாம். அதற்கான சூப்பர் வழிமுறைகளை பற்றி படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ மாவு அரைத்த உடனே புளிக்க வைப்பதற்கு டிப்ஸ்

புளித்த மாவை புதிய மாவு போல ஆக்குவதற்கு டிப்ஸ்:

தோசை ஊற்ற இந்த புளித்த மாவு தான் இருக்கு வேற வழி இல்லை இதை தான் ஊற்றி சாப்பிட வேண்டும் என்று கவலை பட வேண்டாம். எவ்வளவு புளித்த மாவையும் உடனே புளிக்க வைத்து சுவையாக இட்லி, தோசை ஊற்றி செய்து சாப்பிடலாம்.

பச்சைமிளகாய், கறிவேப்பிலை, புதினா மற்றும் பெருங்காயம் போன்றவை சேர்த்து அரைத்து கொள்ளவும. பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு புளித்த மாவில் அரைத்த பேஸ்ட் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும். மாவில் வெங்காயத்தை சேர்த்து ஊற்றலாம் இல்லையென்றால் தோசை ஊற்றிய பிறகு அதன் மேல் வெங்காயத்தை தூவி விடலாம். இது போல் ஊற்றி பாருங்கள் புளித்த மாவு போல இருக்காது அரைத்த மாவை எப்படி தோசை ஊற்றினால் இருக்குமோ அந்த அளவுக்கு ருசியாக இருக்கும்.

புளித்த மாவை புதிய மாவு போல ஆக்குவதற்கு டிப்ஸ்:2

புளித்த மாவில் 2 டம்ளர் தண்ணீரை ஊற்றுங்கள். பிறகு நல்லா கலக்கி விடுங்கள். கலந்துவிட்டு ஒரு 1/2 மணி நேரம் அப்படியே இருக்கட்டும். அரை மணி நேரம் கழித்து பார்த்தால் மாவிற்கு மேல் பொங்கி வந்திருக்கும். பொங்கி வந்த தண்ணீரை கீழே ஊற்றி விடுங்கள். பின் மீதம் உள்ள மாவில் ரவா அல்லது அரிசி மாவு கலந்து கொள்ளுங்கள். பிறகு தோசை ஊற்றி பாருங்கள் அப்படி இருக்கும்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com

 

Advertisement