மாவு சீக்கிரம் புளிக்க என்ன செய்வது.?
ஹாய் நண்பர்களே.! உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் சொல்லி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மாவு அரைத்த உடனே புளிக்க வைப்பதற்கு என்ன செய்வது என்பதை தெரிந்துகொள்வோம். மாவு அரைத்த உடனே புளிக்காது. ஒரு 8 மணி நேரம் ஆகும். ஆனால் சில நேரங்களில் புளித்த மாவு வைத்திருப்போம் அதனோடு அரைத்த மாவையும் கலந்து இட்லி அல்லது தோசை ஊத்துவோம். வீட்டில் புளித்த மாவு இல்லை அரைத்த உடனே தோசை ஊற்றனும் என்ன செய்வது. வாங்க எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டில் பயன்படுத்தும் மிதியடிகளை புதிது போல ஆக்குவதற்கு டிப்ஸ்
மாவு அரைத்த உடனே புளிக்க வைக்க டிப்ஸ்:1
மாவு அரைத்த உடனே புளிப்பதற்கு மூன்று வழிகள் உள்ளன அவை என்னென்ன என்று பார்ப்போம்.
முதலில் உங்களுக்கு தேவையான மாவை மட்டும் எடுத்து கொள்ளவும். மாவு உள்ள பாத்திரத்தின் மேல் ஒரு தட்டு போட்டு மூடவும். அதை வெயிலில் படுமாறு வைக்க வேண்டும்.
சிறுது நேரம் கழித்து பார்த்தால் மாவு புளித்திருக்கும். நீங்கள் இட்லி தோசை செய்து சாப்பிடலாம்.
மாவு அரைத்த உடனே புளிக்க வைக்க டிப்ஸ்:2
அரைத்த மாவில் காய்ந்த மிளகாயை போட வேண்டும். காய்ந்த மிளகாயின் காம்புகளை மாவில் படும்படி 2 அல்லது 3 மிளகாயை போட்டு மூட வேண்டும். 1 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு புளித்திருக்கும்.
மாவு அரைத்த உடனே புளிக்க வைக்க டிப்ஸ்:3
ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைக்க வேண்டும். அந்த சூடு தண்ணீரில் மாவு பாத்திரத்தை மேல் வைக்கவும். 1 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு புளித்திருக்கும்.
மேல் கூறப்பட்டுள்ள டிப்ஸில் எதாவது ஒன்றை பயன்படுத்தி மாவை புளிக்க வைக்கலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tips in Tamil |