மிதியடிகளை ஈசியாக துவைப்பதற்கு டிப்ஸ்
நம் வீட்டில் பயன்படுத்தும் மிதியடிகளை எப்படி தான் துவைத்தாலும் அதில் உள்ள அழுக்குகள் போகாது பழையது போலவே இருக்கும். சில பேர் தினமும் துவைப்பார்கள். அதுமட்டுமில்லாமல் துவைப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள். மிதியடிலிருந்து நாற்றம் வரும். இந்த மாதிரி பிரச்சனைகள் இல்லாமல் ஈசியாக எப்படி துவைப்பது என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம்.
வீடு துடைக்க கஷ்டப்படுகிறீர்கள் என்றால் இந்த டிப்ஸை Follow பண்ணுங்க அது என்னவென்று தெரிந்துகொள்ள கிளிக் செய்து படியுங்கள் ⇒ பெண்களே வீடு துடைக்க கஷ்டப்படுகிறீர்களா.! இனிமேல் இந்த டிப்ஸை Follow பண்ணுங்க
ஸ்டேப்:1
மிதியடியில் தூசி நிறைய இருக்கும். தூசி இல்லாமல் நல்லா தட்டி விடுங்கள்.
ஸ்டேப்:2
பின் அடுப்பை பத்த வையுங்கள். அதில் ஒரு பாத்திரத்தில் மிதியடி மூழ்கிற அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் நல்லா கொதிக்க வேண்டும்.
ஸ்டேப்:3
பின் அதில் வினிகர் தேவையான அளவு, துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் தேவையான அளவு, வாஷிங் சோடா தேவையான அளவு போன்றவற்றை சேர்க்க வேண்டும்.
ஸ்டேப்:4
அடுத்து சேர்த்த பொருட்களை மிக்ஸ் செய்யுங்கள். பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு ஒவ்வொரு மிதியடியாக அந்த தண்ணீரில் போடுங்கள். அப்படியே ஒரு 5 அல்லது 6 மணி நேரம் ஊற வேண்டும்.
ஸ்டேப்:5
மிதியடி ஊறிய பிறகு எடுத்து துவையுங்கள். அழுக்கு எல்லாம் வந்துருக்கும்.
துவைத்த பிறகு 4 அல்லது 5 முறை அலசி விடுங்கள். பிறகு காய வையுங்கள். காய்ந்த பிறகு எடுத்து பாருங்கள் புதிது போல இருக்கும் மிதியடி.
இனிமேல் மிதியடி துவைக்கும் போது இந்த மாதிரி துவையுங்கள் ஈசியாக இருக்கும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ தப்பித்தவறி TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 5 தவறுகள்!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tips in Tamil |