ரேஷன் சேலையை இப்படி கூட யூஸ் பண்ணலாமா.!

Advertisement

ரேஷன் சீலை பயன்கள் 

வருடந்தோறும் பொங்கல் வருவதற்கு முன்னடி அரசாங்கமானது சீலை மற்றும் வேஷ்டி போன்றவை கொடுப்பார்கள். ஆனால் இந்த சீலைகளை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதில்லை. சில பேர் தூக்கி போட்டு விடுகிறார்கள், சில பேர் கடையில் கொடுத்து பணத்தை வாங்கி கொள்கிறார்கள். ஆனால் இந்த சீலை மற்றும் வேஷ்டியை வீட்டில் பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம். அவற்றை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/48Smee9

பீரோவில் துணி வைக்க வேஷ்டி:

ரேஷன் சீலை பயன்கள் 

பீரோவில் துணிகளை வேஷ்டியை பயன்படுத்தலாம். வேஷ்டியை நீட்டமாக விட்டு வைத்து இரண்டாக மடித்து கொள்ளுங்கள். அதன் பிறகு இதில் நீங்கள் வைத்திருக்கும் புடவை அல்லது சுடிதாரை மடித்து வைத்து கொள்ளுங்கள். இது போல் வைப்பதினால் துணிகள் வீணாகாமல் புதிது போலவே இருக்கும்.

இது போல் இல்லையென்றால் இந்த வேஷ்டியை நீங்கள் ஏதும் சுடிதார் அல்லது பிளவுஸ் தைப்பதாக இருந்தால் அதற்கு லைனிங் தேவைப்படும். இதனை நீங்கள் கடையில் தான் வாங்குவீர்கள். அதற்கு பதிலாக இந்த வேஷ்டியை நீங்கள் லைனிங் ஆக கொடுக்கலாம்.

பீரோவில் இப்படி துணியை அடுக்கி வைத்தால் 10 நபரின் துணிகளை கூட வைக்கலாம்..!

சீலை:

ரேஷன் சீலை பயன்கள் 

சீலையை நீங்கள் பிளவுஸ் அல்லது கெவுன் அல்லது டாப் என்று மூன்று விதமாக தைத்து அணிந்து கொள்ளலாம். இதனை தைத்தால் நல்லா இருக்குமா என்றெல்லாம் யோசிக்காதீர்கள். நீங்கள் தையல் காரரிடம் சென்று கொடுத்தால் அவர் டிசைன் ஆக தைத்து கொடுப்பார்கள். இதனை அணிந்து சென்றால் ரேஷன் சேலை மாதிரியே தெரியாது.

அடுத்து இந்த ரேஷன் சீலையை சுடிதார் மற்றும் பிளவுஸ் தைப்பதற்கு லைனிங் ஆக கொடுக்கலாம். இதன் மூலம் நீங்கள் காசை மிச்சப்படுத்தலாம்.

அடுத்து தலைகானி உரையை கடையில் தான் வாங்குவீர்கள். இதற்கு நீங்கள் ரேஷன் சீலையை தலைகாணி உரையாக தைத்து கொள்ளலாம்.

நீங்கள் மிதியடியை கடையில் தான் வாங்குவீர்கள். அப்படி வாங்கினாலும் கொஞ்ச நாட்கள் மட்டும் தான் அவை உழைக்கும், நாளடைவில் வேறு மிதியடி மாற்ற வேண்டியிருக்கும். அதற்கு நீங்கள் இப்படி காசை வேஸ்ட் செய்வதற்கு ரேஷனில் கொடுக்கும் சீலையை பயன்படுத்தலாம். ரேஷன் சீலையை சதுர வடிவில் எத்தனை வருகின்றதோ அத்தனை நறுக்கி கொள்ள வேண்டும். நான்கு புறமும் உள்ள ஓரங்களை அடித்து வாசலில் மிதியடியாக பயன்படுத்தலாம்.

வீட்டின் ஜன்னல் மற்றும் கதவு பகுதிக்கு பயன்படுத்தும் ஸ்கிரீன் துணியாக கூட ரேஷன் சேலையை பயன்படுத்தலாம்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement