Gas Stove And Burner cleaning
இன்றைய அவசர காலகட்டத்தில், ஆண்கள் பெண்கள் என்னும் பாகுபாடு இல்லாமல் வீட்டு வேலைகளை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதிலும் சமையல் என்பது காலை பரபரப்பான சூழலில் செய்யும் போது, நமது சமையல் அறை அதிக எண்ணெய் பிசுபிசுப்புகள் அழுக்குகளை நிறைந்ததாக காணப்படும். அவற்றை சுத்தம் செய்ய தனியாக ஒரு நாள் ஒதுக்க வேண்டி இருக்கும். ஆனால் கேஸ் ஸ்டாவ் மற்றும் பர்னர் இவற்றில் ஏற்படும் அழுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதனால் அவற்றை நாம் சரியான கவனிக்க வேண்டும். அவற்றை சரியான முறையில் கவனிக்கவில்லை என்றால் பெரும் தீவிபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய விபத்துகளை தவிர்க்க அவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அவற்றை சுத்தம் செய்வது அவ்வளவு எளிதல்ல. கேஸ் ஸ்டாவ் மற்றும் பர்னர் சுத்தம் செய்ய நாமும் பல முயற்சிகள் எடுத்து இருப்போம். ஆனால் பலன் என்னோமோ பூஜ்யம் தான். அந்த பிரச்சனைகான எளிமையான ஒரு தீர்வுதான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் கேஸ் ஸ்டாவ் மற்றும் பர்னர் எளிய முறையில் எவ்வாறு சுத்தம் செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கேஸ் ஸ்டாவ் மற்றும் பர்னர் புதியது போல் மாற்ற சில குறிப்புகள்:
Tips 1:
ஒரு டேபிள் ஸ்புன் உப்புடன் ஒரு டேபிள் ஸ்புன் பேக்கிங் சோடாவை சேர்த்து பேஸ்ட் உருவாக்கி அதனை உங்கள் பிசுபிசுப்பான ஸ்டாவ் மீது தேய்க்க வேண்டும். பின்னர் அதனை சிறிது நேரங்கள் ஊற விட்டு பின்னர் அதனை ஸ்க்ரப் பயன்படுத்தி தேய்த்தால் உங்கள் வீட்டு கேஸ் எப்போதும் புதியது போல் மாறிவிடும்.
Tips 2:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் வெள்ளை வினிகர் மற்றும் சமையல் சோடாவை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதில் உங்கள் கேஸ் பர்னர்ரை அதில் 2 மணி நேரங்கள் ஊறவிட்டு, பிறகு அதனை வீட்டில் பாத்திரங்கள் சுத்தம் செய்ய பயன்படுத்தும் சோப் அல்லது திரவத்தை கொண்டு பிரஸ் அல்லது உலோக ஸ்க்ரப் மூலம் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பிசுபிசுப்பான கேஸ் ஸ்டாவ் மற்றும் பர்னர் எளிதில் புதியது போல் மாறிவிடும்.
மாத கணக்கில் புதினா வாடி போகாமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |