வாஷிங் மெஷின் சுத்தம் செய்வதில் இந்த Idea மட்டும் தெரிஞ்சா போதும் உங்களுக்கு கஷ்டமே இருக்காது..!

Advertisement

Washing Machine Cleaning Tips in Tamil

அனைவருடைய வீட்டிலும் துணி துவைக்கும் பிரச்சனை என்பது இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. ஒன்று அல்லது இரண்டு நபர்கள் இருந்தால் அந்த வீட்டில் கொஞ்சம் எளிதில் துணி துவைத்து விடலாம். ஆனால் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கும் வீட்டில் துணி துவைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. இந்த மாதிரி துணி துவைக்கும் கஷ்டம் இல்லாமல் இருப்பதற்காக தான் வாஷிங் மெஷின் என்று ஒரு இயந்திரம் இந்த காலத்தில் பெரும்பாலானா வீட்டில் இருக்கிறது. ஆனால் துணி துவைப்பது எவ்வளவு கடினமா வேலையோ அதேபோல இந்த வாஷிங் மெஷினை சுத்தம் செய்வதும்.  அதனால் இன்றைய Tips பதிவில் வாஷிங் மெஷினை சுத்தம் செய்வதற்கான ஒரு எளிமையான Idea பற்றி தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

வாஷிங் மெஷின் சுத்தம் செய்வது எப்படி..?

வாஷிங் மெஷின் சுத்தம் செய்வது எப்படி

நமது வீட்டில் இருக்கும் வாஷிங் மெஷின் சுத்தம் செய்வதற்கான டிப்ஸ் பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

டிப்ஸ்- 1

தேவையான பொருட்கள்:

  • சமையல் சோடா- 2 ஸ்பூன் 
  • எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
  • துணி துவைக்கும் பவுடர்- 2 ஸ்பூன் 

சுத்தம் செய்தல்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் எடுத்துவைத்துள்ள சமையல் சோடா, எலுமிச்சை சாறு மற்றும் துணி துவைக்கும் பவுடர் இந்த மூன்றையும் போட்டு நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ளுங்கள்.

இப்போது கலந்து வைத்துள்ள பேஸ்டை வாஷிங் மெஷினில் அனைத்து இடங்களிலும் உங்களுடைய கைகளால் தடவி 15 நிமிடம் அப்படி வைத்து விடுங்கள்.

15 நிமிடம் கழித்த பிறகு ஸ்க்ரப்பரை பயன்படுத்தி வாஷிங் மெஷினில் பேஸ்ட் இருக்கும் அனைத்து இடங்களையும் தேய்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு காட்டன் துணியை எடுத்துக்கொண்டு தண்ணீரில் நனைத்து வாஷிங் மெஷினை துடைத்து விடுங்கள்.

கடைசியாக ஈரம் இல்லாத ஒரு காட்டன் துணியை எடுத்து மீண்டும் ஒரு முறை வாஷிங் மெஷினை துடைத்து விடுங்கள். இப்போது பார்த்தால் உங்கள் வீட்டில் இருக்கும் வாஷிங் மெஷின் புதியது போல பளபளப்பாக மாறி இருக்கும். 

இதையும் படியுங்கள்⇒ வீட்டை சுத்தம் செய்வதற்கு இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் ..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement