கனடாவில் அதிக டிமாண்ட் உள்ள வேலைகள் மற்றும் அதன் சம்பளம் இதோ..!

Advertisement

Top 10 Demand Jobs in Canada in Tamil

பொதுவாக பலருக்கு வெளிநாடுகளில் வேலை பார்ப்பதற்கு மிகவும் பிடிக்கும். அப்படி பட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிலும் நீங்கள் கனடாவில் வேலை தேடும் நபர் ஏறினால் இந்த பதிவு உங்களுக்கானது தான். கனடாவில் தற்பொழுது சில வேலைகள் அதிகம் தேவைப்படும் வேலைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த வகையில். இந்த ஆண்டு வெல்டர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் பொதுத் தொழிலாளர்கள் போன்ற தொழிலாளர் வேலைகள் அதிகரித்துள்ளன. மற்ற பொதுவான வேலைகளில் வரவேற்பாளர்கள், நிர்வாக உதவியாளர்கள், கணக்கு மேலாளர்கள், திட்ட மேலாளர்கள், HR மேலாளர்கள், முதலியன உள்ளடங்கும்.

கனடாவில் தற்பொழுது தேவைப்படும் வேலைகள்:

Web Developer:

கனடாவில் Web Developer பணிக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதாவது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய என ஒவ்வொரு மட்டத்திலும் Application-ஐ டெவெலப் செய்யும் மற்றும் ப்ரோக்ராம் செய்யும் வெப் டெவலப்பர்கள்தேவைப்படுகின்றனராம். கனடாவில் ஒரு Web Developer-யின் சராசரி சம்பளம் வருடத்திற்கு 69,305 கனேடிய டாலர் ஆகும். ஆக நீங்கள் ஒரு Web Developer என்றால் கனடாவில் உங்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.

HR Managers:

கனடாவில் HR Managers-க்கு அதிகமாகவே வேலைவாய்ப்புகள் உள்ளன. கனடாவில் மனிதவள மேலாளருக்கான சராசரி சம்பளம் வருடத்திற்கு 89,003 கனேடிய டாலர்கள் ஆகும். நீங்கள் ஒரு HR Managers என்றால் நீங்கள் நீங்கள் கனடாவில் வேலை தேடலாம். உங்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

Financial Officers:

கனடாவில் Financial Officers பதவிக்கு ஒரு நிறுவனத்தின் நிதி தொடர்பான தணிக்கை, வரிவிதிப்பு மற்றும் பிற சிக்கல்களைக் கையாள்வதற்குப் பொறுப்பான கணக்காளர்கள் மற்றும் நிதித் தணிக்கையாளர்களுக்கான தேவை தற்பொழுது அதிகரித்து வருகிறதாம். ஆக ஒருவர் பட்டய நிபுணத்துவ கணக்காளர் (CPA) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நிதி அதிகாரியின் சராசரி சம்பளம் வருடத்திற்கு 70,000 கனேடிய டாலர்கள் ஆகும்.

Electrical Engineer:

கனடாவில் Electrical Engineer-க்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் Electrical Engineer என்றால். உங்களுக்கு கனடாவில் நல்ல சம்பளத்தில் வேலை காத்திருக்கிறது நீங்கள். நல்ல சம்பளத்தில் விலை கிடைக்கும். கனடாவில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரின் சராசரி சம்பளம் வருடத்திற்கு 91,832 கனேடிய டாலர்கள் ஆகும்.

Marketing Head:

கனடாவில் ஒரு Marketing Head-யின் வணிகச் சேவைகளுக்கான சராசரி சம்பளம் வருடத்திற்கு 150,000 கனேடிய டாலர் ஆகும்.

Veterinarian:

கனடாவில் கால்நடை மருத்துவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உள்ளன. கனடாவில் ஒரு கால்நடை மருத்துவரின் சராசரி சம்பளம் வருடத்திற்கு 95,804 கனேடிய டாலர்கள் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 சிங்கப்பூரில் என்ன வேலைக்கு எவ்வளவு சம்பளம்.?

HR and Recruitment Officers:

கனடாவில் Recruiter ஆக நீங்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மனித வள மற்றும் ஆட்சேர்ப்பு அதிகாரிகளின் சராசரி சம்பளம் வருடத்திற்கு 65,292 கனேடிய டாலர்கள் ஆகும்.

Professor/ Lecture:

கனடாவில் Professor/ Lecture பணிக்கு அதிக தேவை உள்ளது. ஒரு பேராசிரியர் அல்லது விரிவுரையாளரின் சராசரி சம்பளம் ஆண்டுக்கு 100,000 கனேடிய டாலர்கள் ஆகும்.

Project Manager:

கனடாவில் சுகாதாரம், பொறியியல், நிதி, சில்லறை வணிகம் மற்றும் இ-காமர்ஸ் போன்ற பல்வேறு துறைகளில் திட்டத் தலைவரின் பங்கு நிரப்பப்படலாம். இந்த வேலைக்கான சராசரி சம்பளம் ஆண்டுக்கு சுமார் 100,000 கனேடிய டாலர் ஆகும்.

Aerospace Engineer:

கனடாவில் ஏரோடைனமிக்ஸ் இன்ஜினியர் பதவிக்கு நல்ல வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. ஆக Aerospace Engineer படித்தவர்கள் கனடாவில் வேலை தேடலாம். ஏரோஸ்பேஸ் இன்ஜினியரின் ஆரம்ப சம்பளம் ஆண்டுக்கு 90,000 கனேடிய டாலர்கள் ஆகும்.

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide
Advertisement