ஹோண்டா ஆக்டிவா 6ஜி விலை | Honda Activa 6g Price

Advertisement

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விலை

வாகனங்களில் இப்போது பலரும் அதிகமாக விரும்புவது ஸ்கூட்டி தான். பார்ப்பதற்கும் அழகாகவும், ஓட்டுவதற்கு நல்ல மைலேஜ் தரக்கூடியதாகவும் இருக்கிறது. ஸ்கூட்டி வகைகளில் பல மாடல்கள் உள்ளன. இப்போது புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்கூட்டியானது வாடிக்கையாளர்கள் மனதை மிகவும் கவர்ந்துள்ளது. வாங்க இந்த பதிவில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் விலையை தெரிந்துக்கொள்ளலாம்..

கார் மாடல்கள் | கார் விலை பட்டியல்

ஹோண்டா ஆக்டிவா 6ஜி விலை:

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் தற்போதைய விலை 576 ரூபாய் உயர்ந்து ரூ.68642 க்கு விற்பனை ஆகிறது.

ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் வேரியண்ட்  விலை ரூ.70,142  ஆக (சென்னை எக்ஸ்ஷோரூம்) நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் தொடர்ந்து 110சிசி என்கிற ஸ்கூட்டர் முத்லிடத்தில் உள்ள ஆக்டிவா 6ஜி-யில் 109.51 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp பவர் மற்றும் 5,250 ஆர்பிஎம்-ல் 8.79 NM டார்க் வழங்குகின்றது. முந்தைய மாடலை விட 10 சதவீத கூடுதல் மைலேஜ் தருவதாக கூறப்படுகிறது.

Honda Activa 6G Colors

முன்பு ரூ.563 ரூபாய்க்கு விலை உயர்த்தப்பட்டிருந்த நிலையில் இப்போது ரூ.576 வரை உயர்ந்துள்ளது. எனவே, பிஎஸ்6 விற்பனைக்கு வந்த பிறகு தற்போது வரை ரூ.1507 வரை விலை உயர்ந்துள்ளது.

இந்த மாடலுக்கு நேரடியான போட்டியை டிவிஎஸ் ஜூபிடர் மற்றும் ஹீரோ பிளெஷர் பிளஸ் ஏற்படுத்துகின்றது. இந்த பிரிவில் குறைவான விலை கொண்ட மாடலாக பிளெஷர் பிளஸ் விளங்குகிறது.

இதை தவிர இந்நிறுவனத்தின் ஹோண்டா எஸ்பி 125 மாடல் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தை விட  தற்போது வரை ரூ.955 வரை உயர்த்தப்பட்டுள்ளது

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement