இந்த Summer-க்கு டூர் போனுமா..! அப்போ எந்தந்த இடத்துக்கு போலானு தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

Advertisement

Coolest Place in Tamilnadu During Summer 

இப்போது வர வர வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகிறது. இப்படிப்பட்ட சுழலில் வெளியில் வருவதுக்கூட மிகவும் கஷ்டமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பள்ளி மாணவர்களுக்கு எல்லாம் ஆண்டு தேர்வும் நடைபெற்று கொண்டிருக்கிறது. தேர்வு முடிந்த உடன் அடுத்து கோடை விடுமுறை என்பதால் அனைவருடைய மனத்திலும் எங்கெங்கு செல்லலாம் என்ற ஆசை வந்து கொண்டே இருக்கும். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் வெயிலில் வெளியே கூட செல்ல முடியவில்லை இதில் எப்படி சுற்றுலா செல்வது என்று குழப்பம் மனதில் வந்து கொண்டிருக்கும். இதுபோன்ற குழப்பம் உள்ளவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். எப்படி என்றால் இந்த கோடைகாலத்திற்கு ஏற்ற மாதிரியான குளிர்ச்சியான சுற்றுலா தளங்கள் பற்றி தான் பார்க்கப்போகிறோம். சரி வாங்க அது என்னென்ன இடம் என்று தெரிந்துக்கொள்ளலாம்.

கோடை சுற்றுலா தமிழ்நாடு

ஏற்காடு:

ஏற்காடு

நாம் முதலாவதாக பார்க்கபோகும் இடம் ஏற்காடு தான். தமிழ்நாட்டில் அமைந்துள்ள இந்த ஏற்கடானது மிகவும் கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு இடமாக அமைந்துள்ளது. ஏற்காடு நிறைய மலைகள் மற்றும் அருவிகள் காணப்படுவதால் குளிர்ச்சி மிக்க ஒரு இடமாக இருக்கிறது. அதனால் இந்த ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர்.

மேலும் இந்த ஏற்காட்டில் தாவரவியல் பூங்கா, பெண் இருக்கை, சேவராய் கோவில், பகோடா பாயின்ட், அண்ணா பண்ணை, கிளியூர் நீர்வீழ்ச்சி, பட்டுப் பண்ணை, கரடி குகை மற்றும் ஏற்காடு ஏரி போன்றவை கண்ணைக் கருவரும் விதத்தில் உள்ளது.

குன்னூர்:

குன்னூர்

அடுத்து கோடை காலத்திற்கு ஏற்ற இடமாக பார்க்க இருப்பது குன்னூர் தான். குன்னூரிற்கு ஒரு முறை நீங்கள் சென்றால் போதும் உங்களுக்கு திரும்பி வர வேண்டும் என்ற எண்ணமே வராது. ஏனென்றால் அத்தனை விதமான அழகுகளையும், குளிர்ச்சினையும் கொண்டுள்ளது தான்  ஏற்காடு.

இது மட்டும் இல்லாமல் ஏற்காட்டில் உள்ள செயின்ட் ஜார்ஜஸ் சர்ச், டால்பின் நோஸ், ஹைஃபீல்ட் தேயிலை தொழிற்சாலை, சிம்ஸ் பார்க், ட்ரூக் கோட்டை, மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு ஆகிய இடங்களும் காணப்படுகிறது.

மகாபலிபுரம்:

மகாபலிபுரம்

மகாபலிபுரம் என்றால் நமக்கு நியாபகம் வருவது என்னவோ அழகிய கடற்கரை தான். ஆனால் இத்தகைய கடற்கரையினை காட்டிலும் அழகிய கட்டிடக்கலை மற்றும் சிலைகளும் அங்கு இடம் பெற்றுருக்கிறது.

இத்தனை அழகுமிக்க இந்த மகாபலிபுரத்தை காண்பதற்கு என்றும் நிறைய சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே தான் உள்ளார்கள். ஆகையால் நீங்களும் ஒரு முறை அங்கு சென்று வாருங்கள்.

கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா.. 

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி

கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய வெயிலினை தணிக்க கூடிய ஒரு இடம் என்றால் அது நமது பாண்டிச்சேரி தான். ஏனென்றால் பாண்டிச்சேரியில் குளிர்ச்சியினை அளிக்கக்கூடிய அருமையான இரண்டு கடற்கரைகள் உள்ளது.

அதுமட்டும் இல்லாமல் அங்கு சுற்றிபார்ப்பதற்கு நிறைய கோவில்கள் மற்றும் கட்டிடக்கலைகளும் உள்ளது. அதனால் எங்கு சுற்றுலா சென்றாலும் மறக்காமல் ஒரு முறை பாண்டிச்சேரிக்கு சென்று வாருங்கள்.

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி

கடைசியாக நாம் பார்க்கப்போகும் இடம் பொள்ளாச்சி தான். இந்த இடத்திற்கு சென்றாலே நமக்கு ஏதோ ஒரு புது விதமான மகிழ்ச்சி தோன்றும் வகையில் இருக்கும்.

அதுபோல இந்த பொள்ளாச்சியில் அழகிய படகுகள், நீடித்து கொண்டே செல்லக்கூடிய தென்னை மரங்கள் என பலவகையான இயற்கை அம்சங்களை கொண்டுள்ளது. அதனால் பொள்ளச்சியையும் மிஸ் பண்ணிடாமல் பார்த்து வாருங்கள்.

மேலும் பொள்ளாச்சியில் கண்டுக்களிக்க வேண்டிய நிறைய இடங்கள் உள்ளது.

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide
Advertisement