இந்தியாவின் 10 பாதுகாப்பான கார்களின் பட்டியல் | Top 10 Safest Cars in India 2022 List in Tamil
வாகனங்கள் நம்முடைய அன்றாட தேவைக்கு மிகவும் பயன்படக்கூடிய ஒன்றாக உள்ளது. தொலைதூரத்தில் உள்ளவர்களை பார்ப்பதற்கும், வேலைக்கு செல்வதற்கு என பல வகைகளிலும் நாம் வாகனங்களை பயன்படுத்துகிறோம். நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் போன்றவைகள் உள்ளது. இதில் எல்லோரிடமும் எல்லா வாகனமும் இருப்பதில்லை. ஒரு சிலரிடம் கார்கள், பைக்குகள் உள்ளது. கார்கள் வைத்திருப்பவர்களுக்கும், கார் வாங்க போகிறவர்களுக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். எந்த வாகனமாக இருந்தாலும் அதில் பாதுகாப்பு முக்கியம், அந்த வகையில் சிறந்த பாதுகாப்பை தரும் கார்களின் பட்டியலை GLOBAL NCAP வெளியிட்டுள்ளது அதனை இந்த தொகுப்பில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
TATA PUNCH:
- பாதுகாப்பான கார்களில் முதலிடம் பெற்றிருப்பது TATA PUNCH.
- பெரியவர்களுக்கான சோதனையில் 16.45 புள்ளிகளும், குழந்தைகளுக்கான சோதனையில் 40.89 மதிப்பெண்களும் பெற்றுள்ளது.
- இதில் இரண்டு Airbags, ABS brakes மற்றும் ISOFIX anchorages உள்ளது.
Mahindra XUV300:
- உலகின் பாதுகாப்பான கார்களில் Mahindra XUV300 இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
- இந்த காருக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கபட்டுள்ளது.
- இந்த காரில் பயணிப்பவர்களுக்கு தேவையான அணைத்து பாதுகாப்பு வசதியும் இதில் உள்ளது.
Tata Altroz:
- இந்த கார் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது, இதுவும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
- இந்தியாவில் உள்ள ஹாட்ச் பேக் கார்களிலேயே சிறந்த பாதுகாப்பை தரும் கார் இந்த அல்ட்ரோஸ் கார் ஆகும்.
Mahindra XUV700:
- சிறந்த பாதுகாப்பை பெற்றுள்ள வாகனத்தில் Mahindra XUV700 நான்காவது இடத்தை பெற்றுள்ளது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்க்காக 5 ஸ்டார்களை பெற்றுள்ளது.
- குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த காரில் 7 ஏர் பேக், ESP எனப்படும் (எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி ப்ரோக்ராம்) வசதி, கார்னெர் லேம்ப், 360 டிகிரி கேமரா, பிளைண்ட் மோனிடர், டிரைவிங் அஸ்சிஸ்ட் உள்ளது.
Tata Nexon:
- இந்திய கார்களிலே முதல் முதலாக 5 ஸ்டார்களை பெற்ற கார் இந்த நெக்சோன் கார் ஆகும். இது ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.
- இந்த காரில் இரண்டு முன்பக்க ஏர் பேக்ஸ், ABS வசதி ஆகியன உள்ளன.
Toyota Urban Cruiser:
- பாதுகாப்பான கார்களில் Toyota Urban Cruiser ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த காருக்கு NCAP அமைப்பு 4 ஸ்டார்களை வழங்கியுள்ளது.
- இதில் எச்சரிக்கை Busser, IRVM, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் பிற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
Honda City:
- பாதுகாப்பான கார்களின் சோதனையில் ஏழாவது இடத்தை Honda City பெற்றுள்ளது. இந்த காரில் முன்பக்கம் இரண்டு ஏர் பேக் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த காரின் ஷெல் நிலையற்றதாகவும் மேலும் ஏற்றுவதற்கு திறனற்றதாகவும் மதிப்பிடப்பட்டது.
Honda Jazz:
- பாதுகாப்பான கார்களில் Honda Jazz எட்டாவது இடத்தை பெற்றுள்ளது. இந்த காரில் பயணிப்பவர்களின் கழுத்து மற்றும் தலைக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக இதனுடைய வடிவமைப்பு உள்ளது.
- Honda Jazz நான்கு ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த காரில் இரண்டு முன்பக்க ஏர் பேக், ABS போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
Nissan Magnite:
- பாதுகாப்பான கார்களில் Nissan Magnite ஒன்பதாவது இடத்தை பெற்றுள்ளது. இந்த காரில் பயணிப்பவர்களின் கழுத்து மற்றும் தலைக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக இதனுடைய வடிவமைப்பு உள்ளது.
- Nissan Magnite நான்கு ஸ்டார்களை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 2 ஸ்டார்களை பெற்றுள்ளது.
Renault Kiger:
- இந்தியாவின் பாதுகாப்பான கார்களில் பத்தாவது இடத்தை Renault Kiger வாகனம் பெற்றுள்ளது. இந்த வாகனத்திற்கு NCAP அமைப்பு 4 ஸ்டார்களை வழங்கியுள்ளது.
எவ்வளவுதான் கார் வந்தாலும் இந்த காருக்கு உள்ள கெத்து குறையவில்லை |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |