தமிழ் கவிதை வரிகள் | Tamil Kavithaigal lyrics
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக அனைவருக்கும் கவிதை என்றாலே மிகவும் பிடிக்கும். சிலர் நன்றாக கவிதை எழுதுவார்கள், சிலருக்கு கவிதை எழுத தெரியாது என்றாலும் கவிதைகளை படிக்க அதிகம் ஆர்வமாக இருப்பார்கள். இந்த கவிதைகளில் பல வகை இருக்கிறது. நமக்கு பிடித்தவர்களுக்கு அல்லது சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கவிதைகளை படங்கள் மூலம் பகிர்ந்திட இந்த பதிவில் பொதுவான தமிழ் கவிதைகளை படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றை இங்கு காணலாம் வாங்க.
Kavithai in Tamil Lyrics..!
பொருட்களை பயன்படுத்துங்கள்
நேசிக்காதீர்கள்..!
மனிதனை நேசியுங்கள்
பயன்படுத்தாதீர்கள்..!
தமிழ் கவிதைகள்:-
சோகமாக இருக்கும் போது கூட
சிரித்து கொண்டே இரு… உன் சிரிப்புக்காகவே
உன்னை ஒருவர் நேசிக்க கூடும்..!
Kavithai in Tamil:-
வார்த்தைகளை சிதறவிடாதே…
பிறகு நீ வள்ளுவரானாலும்,
உன்னை யாரும் கவனிக்க மாட்டார்கள்..!
Tamil Kavithai:-
உன் சோகங்களை களைத்து விட்டு
உன் புன்னகையை கொண்டு
எல்லாவற்றையும் விரட்டி அடி
உன் முகம் மலரட்டும்
தமிழ் கவிதைகள்:
வெற்றியை ஒரு போதும் தலைமேல் தூக்கி பெருமிதம் கொள்ளாதே..!
தோல்வியை ஒரு போதும் புறம் தள்ளி ஒதுக்கி விடாதே..!
Tamil Kavithaikal:-
கோபத்திற்கு
இருக்கும் மரியாதை
யாரும் புன்னகைக்கு
கொடுப்பதில்லை..!
தமிழ் கவிதைகள்:-
பேரின்பம் வேண்டாம்
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும்
நம் வாழ்வை
அனுபவித்து வாழ..!
Kavithai in Tamil Lyrics:-
வாழ்க்கையில்
எத்தனை
கஸ்டங்கள் வந்தாலும்
உங்களுக்கான
நிமிடங்களை
ரசிக்க தவறாதீர்கள்..!
பொதுவான கவிதைகள்:-
இந்த நிமிடத்தில்
வாழ்க்கை எவ்வளவுகடினமாக
வேண்டுமானாலும்
தெரியலாம்..! ஆனால்
செய்வதற்கும் வெல்வதற்கும்
ஒவ்வொரு நொடியும்
ஏதேனும் ஒன்று
இருந்துகொண்டேதான் இருக்கிறது..!
தமிழ் கவிதைகள்:-
தொலைவின் தேடல்கள்
எல்லாமே அருகில்
இருந்த போது
தொலைக்கப் பட்டவையே..!
காதல் கவிதைகள் | Love Quotes in Tamil |
Tamil Kavithaigal:
நமக்கு கிடைக்கும்
மகிழ்ச்சி என்பது
இடங்களை பொறுத்து
அமைவதில்லை
நம்மோடு பயணிக்கும்
மனிதர்களைப் பொறுத்தே
அமைகிறது..!
Tamil kavithaigal in tamil language
வென்றவனுக்கும்
தோற்றவனுக்கும்
வரலாறு உண்டு..!
வேடிக்கை பார்த்தவனுக்கும்,
விமர்சனம் செய்தவனுக்கும்
ஒரு வரி
கூட கிடையாது..!
சிறந்த தமிழ் கவிதைகள்:
தேவைக்கு அதிகமான நினைவுகளும் கடனும் தூக்கத்தை பறித்துக்கொள்ளும்
பயத்தின் முடிவு வாழ்க்கையின் ஆரம்பம்.
போதிக்கு ம்போது கற்றுக் கொள்ளாத பாடத்தை பாதிக்கும் போது கற்றுக்கொள்கிறோம்
எங்கேயோ தொலைந்துவிட்டது
என்னுள் இருந்த
சிரிப்பு சத்தம்
மகிழ்ச்சி என்பது சிரித்துக் கொண்டு இருப்பது அல்ல தனிமையில் இருக்கும் போதும் எந்த வித கவலையுமின்றி இருப்பது
வாழ்க்கையை அனுபவிப்பவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்
அனுபவித்த துன்பங்களை மறந்து விடு அனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதே
உண்மையாக நேசிக்கும்
நெஞ்சத்துக்கு தான் புரியும்
பிரிவால் வரும் வலி
என்னவென்று
புன்னகை எல்லாம் புகைப்படத்தில் மட்டுமே
என்னவெல்லாமோ ஆகனும்னு ஆசைப்பட்டு கடைசியில் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்ற ஏக்கத்தில் முடிகிறது வாழ்க்கை
வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் கசப்பான சம்பவங்கள் தான் நமக்கு நல்ல பாடங்களையும் நல்ல அறிவுரைகளையும் வழங்கி விட்டு செல்லும்
விட்டுவிடாதீர்கள் ஆரம்பம் எப்போதும் கடினமானது
தமிழ் கவிதை வரிகள்:
சில உறவுகள்
நம் கற்பனையில்
மட்டும் தான்
நிஜத்தில் அல்ல
தமிழ் கவிதைகள்:
எனக்கு துரோகம் இழைக்க நீ எடுக்கும் ஆயுதம் நட்பு என்றால் உன்னை வெல்ல நான் எடுக்கும் ஆயுதம் உண்மையான நட்பு
துடைக்க யாரும் இல்லா தருணங்களில் எல்லோர் முன்பு வரும் கண்ணீர் கூட துரோகி தான்
எப்பொழுது ஒருவர் மீது அதிகமாக கோபம் கொள்கிறாயோ அப்பொழுதே புரிந்துகொள் நீ அவர்கள் மீது உயிராய் இருக்கிறாய் என்று
வலி கண்ணீர்களில் தான் இருக்கிறது என்று அர்த்தமல்ல அது சில பொய்யான சிரிப்பிலும் மறைந்து இருக்கும்
பையன் ஆணவமாக இருந்தால் கம்பீரன் என்று கூப்பிடும் இந்த உலகம் பெண்களை திமிர் பிடித்தவள் என்று கூப்பிடுவார்கள் அப்படி கூப்பிட்டாலும் நாங்கள் இப்படி தான் இருப்போம்
பேசாமா போயிடு என்ற சொல்லுக்கு அவள் அகராதியில் எங்க நீ போய் தான் பாரேன் என்று பொருள்
கவிதைகள் தமிழில்:
உலகத்தில் யாரை நாம்
அதிகமாக நம்புகிறோமோ
அவர்களிடம் தான்
நாம் ஏமாந்து போகிறோம்
உணர்வுகளை
வார்த்தைகளில்
விவரிப்பது அத்தனை எளிதல்ல
நேசிக்கத் தெரியாத
மனிதர்களிடம் நேசத்தை
எதிர்பார்ப்பது முட்டாள்தனம்
உரிமை இல்லாத
இடத்தில் எதையுமே
எதிர்பார்ப்பது
தவறு
அன்பும் ஒரு நாள்
தோற்றும் போகும்
உண்மை
இல்லாதவரை நேசித்தால்
சிறந்த தமிழ் கவிதைகள் Lyrics:
என் காதலை பத்திரமாய்
சேமித்து வைக்கிறாய் நீ
கொஞ்சமாய் செலவு செய்
மீண்டும் நிரப்ப நான்
காதல் தருகிறேன்
என்னையும் வெட்கப்பட
வைத்துவிட்டாய் உன் காதல்
மொழியால்
உன்னோடு நான் காணும்
மொட்டை மாடி மாலை நேர தேநீர்
இரவு நிலா இவை இல்லாத
நாட்களே வேண்டாம் எனக்கு
என்னையும் என்
உலகத்தையும் முழுவதுமாக
திருடிச்சென்றவள் நீ
சண்டைபோடு பேசாமல் இரு
நிதானமாக யோசித்துப்பார்
உன்னுள் இருப்பது
என் காதல் மட்டுமே
பறந்து செல்ல
சிறகுகள் தேவையில்லை
உன் காதல் ஒன்றே போதும்
உன் முதல் பார்வை
உன் முதல் புன்னகை
உன் முதல் ஸ்பரிசம்
உன் முதல் சப்தம்
உன் முதல் அணைப்பு
இவை எல்லாம்
மீண்டும் பூக்க செய்தது
என் பெண்மையை
அம்மா கவிதைகள் | Amma Kavithai in Tamil |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |