Barley Benefits Tamil
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாக விளங்குவது பார்லி, இந்த பார்லி (barley benefits) டயட்டில் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என்று அனைவரும் தினமும் சாப்பிட்டு வரலாம்.
தினமும் பார்லியை உட்கொண்டு வந்தால் உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்கலாம். மேலும் இந்த பார்லி இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் இந்த பார்லி அரிசி கஞ்சி சிறுநீரகத்தின் செயலாற்றலை ஊக்குவிக்கிறது.
அதேபோல் செரிமான கோளாறுகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. எனவே தினமும் பார்லி கஞ்சி (barley drink) உட்கொள்வதால் உடலில் ஆரோக்கிய சக்திகளை அதிகரிக்கலாம், உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தவிர்த்து கொள்ளலாம், முக்கியமாக உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
பார்லி கஞ்சி பயன்கள்..! Barley Rice Benefits in Tamil..!
Barley Benefits Tamil – இதயத்தை பாதுகாக்க:
இயற்கையாகவே பார்லியில் (barley benefits) இருக்கும் ஊட்டச்சத்துக்கள் புற்று நோய்களை எதிர்த்து போராடும் தன்மை உடையது. எனவே தினமும் பார்லி அரிசி கஞ்சி (barley drink) சாப்பிட்டு வர மார்பக மற்றும் ஹார்மோன் புற்றுநோய்கள் வராமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது, மேலும் பார்லி கஞ்சி (barley drink) தினமும் சாப்பிட்டு வர இதய கோளாறுகள் மற்றும் இதய பாதிப்புகள் வராமலும் பாதுகாக்க உதவுகிறது.
நாவல் பழத்தின் அருமை மற்றும் பயனை தெரிஞ்சிகோங்க..!
Barley Benefits Tamil– பெருந்தமனி தடுப்பு:
பார்லியில் (barley benefits) இருக்கும் நியாஸின் உடலில் கொலஸ்ட்ரால் அளவை ஒட்டுமொத்தமாக குறைத்து இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க பெரிதும் உதவுகிறது.
Barley Benefits Tamil– இரத்த கொழுப்பு அளவை:
பார்லியில் (barley benefits) அதிகளவு நார்ச்சத்து உள்ளது. எனவே தினமும் பார்லி அரிசி கஞ்சி அருந்தி வர இரத்த கொழுப்பை குறைக்கவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும் செய்கிறது, இதனால் உடல் எடையை குறைக்கவும் பார்லி பெரிதும் உதவுகிறது.
Barley Benefits Tamil நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:
பார்லியில் (barley benefits) உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலுவூட்டுகிறது, இதனால் அடிக்கடி வரும் இருமல், காய்ச்சல், சளி போன்றவை வராமல் நம்மை பாதுகாக்கிறது.
Barley Benefits Tamil – இரும்பு சத்தை அதிகரிக்க:
பார்லியில் இருக்கும் இரும்புச்சத்து இரத்தத்தின் அடர்த்தியை சீராக்குகிறது.
இதனால் இரத்த சோகை, மயக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் பார்லி சிறுநீரகத்தின் செயலாற்றல் மேம்படவும் பயனளிக்கிறது.
Barley Benefits Tamil– பித்தப்பை கற்களை கரைக்க:
தினமும் அன்றாட உணவில் பார்லியை சேர்த்து கொள்வதினால் பித்தப்பையில் கற்கள் சேராமல் உடல் நலத்தை பாதுகாக்க முடியும்.
பார்லியில் உள்ள புரதம் பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்கும் தன்மை கொண்டது.
எனவே பித்தப்பையில் கற்கள் வராமல் இருக்க தினமும் பார்லி அரிசி கஞ்சி (barley drink) உணவாக சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
எலுமிச்சை வேக வைத்த நீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள்???
Barley Benefits Tamil– எலும்பு தேய்மானம்:
பார்லியில் (barley benefits) இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்றவை எலும்புகளின் வலிமையை உறுதியாக்குகின்றன.
முக்கியமாக இதிலிருக்கும் பாஸ்பரஸ், எலும்பு மற்றும் பல் சார்ந்த கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.
பார்லி கஞ்சி செய்முறை:
தேவையான பொருட்கள்:
- பார்லி அரிசி – ஒரு கப்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- பார்லி அரிசியை வாணலியில் சேர்த்து லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு மிக்சியில் ரவை பதத்திற்கு வறுத்த பார்லி அரிசியை உடைத்து கொள்ள வேண்டும்.
- பின்பு அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, பின்பு பார்லி சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
- பிறகு பார்லி அரிசி கஞ்சி வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தங்களுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அனைவருக்கும் பரிமாறவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |