எல்லாருக்கும் பிடிக்கும் மணத்தக்காளி கீரை பொரியல்..! Manathakkali keerai poriyal eppadi seivathu..!

manathakkali keerai poriyal

மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkali keerai poriyal eppadi seivathu) மற்றும்  மணத்தக்காளி கீரை மருத்துவ பயன்கள்:

மணத்தக்காளி கீரை மிகவும் மருத்துவ குணம் உள்ள ஒரு தாவரம் ஆகும். இந்த மணத்தக்காளி கீரையை தினமும் அதிகளவு நாம் உண்டு வந்தால் வயிற்று பிரச்சனை, வாய் புண் மற்றும் உடல் உஷ்ணம் போன்ற பிரச்சனைகளை உடனே குணப்படுத்துகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மணத்தக்காளி கீரையை நாம் கூட்டாகவோ அல்லது சூப்பாகவோ அல்லது பொரியலாகவோ தினமும் நாம் உண்டு வந்தால் உடலில் ஏற்படும் பலவகையான பிரச்சனைகளை உடனே சரி செய்து விடும்.

சரி வாங்க இந்த பகுதியில் மணத்தக்காளி கீரை பொரியல் (manathakkali keerai poriyal) எப்படி செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் பார்ப்போம்.

மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkali Keerai Poriyal) செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள்:

  1. மணத்தக்காளி கீரை – 1 கட்டு
  2. சின்ன வெங்காயம் (அரிந்தது) – 7
  3. வரமிளகாய் – 3
  4. பூண்டு – 3 பல்
  5. சீரகம் – 2 டீஸ்பூன்
  6. கடுகு – 1 டீஸ்பூன்
  7. உளுந்து – 1 டீஸ்பூன்
  8. தேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
  9. உப்பு, எண்ணைய் – தேவைக்கேற்ப

கேட்டாலே நாக்கில் எச்சில் ஊறவைக்கும் கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு !!!

மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkali Keerai Poriyal) செய்முறை:

மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது எப்படி: 1

முதலில் மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடிதாக நறுக்கி கொள்ளவும்.

பின்பு வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.

Manathakkali keerai poriyal eppadi seivathu step: 2

பிறகு இதனுள் தண்ணீரில் அலசிய கீரையைப் போட்டு கை அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும்.

கீரை பாதி அளவு வெந்ததும் சிறிதளவு சீரகத்தை சேர்க்கவும்.

Manathakkali keerai poriyal eppadi seivathu step: 3

மணத்தக்காளி கீரை நன்றாக வெந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து இருமுறை கிளறிவிட்டு, பின்பு அடுப்பில் இருந்து கீரையை இறக்கவும்.

Manathakkali keerai poriyal eppadi seivathu step: 4

அவ்வளதுதான் சுவையான மணத்தக்காளி கீரை பொரியல் (manathakkali keerai poriyal) தயார் அனைவருக்கும் இந்த பொரியலை காரக்குழம்பு அல்லது புளிக்குழம்புடன் சேர்த்து பரிமாறினால் இந்த பொரியல் மிகவும் சுவையாக இருக்கும்.

சுவையான அஃகாரத்து மோர் குழம்பு செய்முறை..!

மணத்தக்காளி கீரை மருத்துவ பயன்கள்:

மணத்தக்காளி கீரை மருத்துவ பயன்கள் கொண்ட ஒரு சிறந்த தாவரமாக அமைந்துள்ளது. இந்த மணத்தக்காளி கீரை மருத்துவ பயன்கள் அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க மணத்தக்காளி கீரை மருத்துவ பயன்கள் பற்றி இப்போது நாம் காண்போம்.

1. மணத்தக்காளிக் கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும். குறிப்பாக பூப்பெய்திய காலத்தில் சிறுமிகளுக்கு கொடுத்து வரலாம்.

2. வாரம் இரு முறை மணத்தக்காளியை உண்டு வர கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழற்சியைப் போக்கலாம்.

3. இருதயத்தின் செயல்பாடு வலிமை கூடும்.

4. களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.

5. மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

6. கண்பார்வை தெளிவு பெறும்.

7. வயிற்று நோய், வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை உடையவர்கள் மணதக்காளிக்கீரையை சமைத்து உண்டால் நோய்க் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

8. கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

9. மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையைப் போக்கும்.

10. கீரைப்பூச்சி என்ற தொல்லை ஏற்பட்டால் மணத்தக்காளி அதனை வெளியேற்றும்.

11. மணத்தக்காளிக் கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணமும் உண்டு.

12. கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது.

13. மணத்தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சத்து நிறைந்த அரைக்கீரை குழம்பு செய்யலாம் வாங்க..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal