மீந்து போன சாதத்தில் சூப்பரான ஹல்வா செய்யலாம் வாங்க ..!

Halwa Recipe

ஹல்வா செய்முறை (Halwa Recipe):

சுவையான ஹல்வா செய்முறை (halwa recipe) விளக்கம்: இனி சாதம் மீதமிருந்தால் கவலை வேண்டாம், சூப்பரான ஹல்வா தயார்..! எப்படி என்று நினைக்கின்றிர்களா பொதுவாக நாம் வீட்டில் தினமும் மதிய உணவிற்கு சாதம் வடிப்போம், சில நேரங்களில் வடித்த சாதம் மீதம் இருக்கும். இந்த மீந்து போன சாதத்தை வைத்து மிகவும் சூப்பரான மற்றும் சுவையான ஹல்வா செய்யலாம் வாங்க..! இந்த சுவையான ஹல்வாவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்..!

சரி நாம் பொதுநலம் பகுதில் இன்று சமையல் குறிப்பில் மீந்து போன சாதத்தில் சூப்பரான ஹல்வா செய்வது எப்படி என்பதை பற்றி படித்தறிவோம் வாருங்கள் ..!

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இட்லி ப்ரை செய்யலாம் வாங்க !!!

ஹல்வா செய்முறை (Halwa Recipe) செய்ய தேவைப்படும் பொருட்கள்:

  1. சாதம் – ஒரு கப்
  2. சர்க்கரை – ஒரு கப்
  3. கேசரி பவுடர் – தேவையான அளவு
  4. நெய் – முக்கால் கப்
  5. உப்பு – தேவையான அளவு
  6. ஏலக்காய் பவுடர் – தேவையான அளவு
  7. முந்திரி – ஒரு கைப்பிடி அளவு (வருத்து கொள்ளுங்கள்)

ஹல்வா செய்முறை (Halwa Recipe):

இந்த ஹல்வா செய்முறை (halwa recipe) பொறுத்தவரை மிக எளிதாக செய்துவிட முடியும்… மேலும் குழந்தைகள் இந்த ஹல்வாவை மிக விரும்பி சாப்பிடுவார்கள்.

முதலில் ஒரு நான்ஸ்ட்டிக் தவாவை எடுத்துக்கொள்ளுங்கள், அவற்றை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு சாதத்தை வதக்கி கொள்ளவும். குறிப்பாக அடுப்பை மிதமான சூட்டி வைத்து சாதத்தை வதக்கி கொள்ளவும்.

பின்பு அந்த சாதத்தை மிக்சியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மைபோல நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்பு அதே நான்ஸ்ட்டிக் தவாவை அடுப்பில் வைத்து, நான்கு ஸ்பூன் நெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள சாதத்தை அவற்றில் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் மிதமான சூட்டில் கிளறிவிடவும்.

பன்னீர் கோலா உருண்டை செய்வது எப்படி..?

பிறகு ஒரு கப் சர்க்கரையை அவற்றில் சேர்த்து, நன்றாக கிளறிவிடவும்.

அதன் பிறகு ஏலக்காய் பவுடர் தேவையான அளவு சேர்த்து கலவையை நன்றாக கிளறி விடவும்.

பின்பு கேசரி பவுடரை சிறிதளவு கிண்ணத்தில் எடுத்து கொண்டு அவற்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து, அந்த கலவையை ஹல்வாவில் ஊற்றி கிளறுங்கள். அதனுடன் ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு சேர்த்து, நன்றாக கிளறி கொள்ளுங்கள்.

இறுதியாக வறுத்து வைத்துள்ள முந்திரியை, ஹல்வாவில் சேர்த்து, நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள்.

மாலை நேர திண்பண்டம் அவல் போண்டா செய்வது எப்படி ?

ஹல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் நன்றாக சுருண்டு வரும், அந்த நிலை வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி, சுத்தமான பாத்திரத்தில் மாற்றி, அனைவருக்கும் அன்புடன் பரிமாறுங்கள்.

இந்த ஹல்வா செய்முறை (halwa recipe) மிக எளிதாக 20 நிமிடங்களில் செய்து விட முடியும்.

மேலும் இதுபோன்ற சமையல் குறிப்பு பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள நம் பொதுநலம் பகுதியை பார்வையிடவும்…

கறிவேப்பிலை சட்னி இப்படி செய்து பாருங்க..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.