அரசின் இலவச ஆடு, மாடு, கோழி கொட்டகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Advertisement

அரசின் இலவச ஆடு மாட்டு மற்றும் கோழி கொட்டகை அமைக்க திட்டம்..!

Free Goat Shed Scheme:- வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம் பதிவில் விவசாயிகள் வளர்க்கும் ஆடு மாடு கோழிகளுக்கு கொட்டகை அமைத்து தரப்படும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. சரி இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயனடையலாம், இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் போன்ற விவரங்களை இங்கு நாம் படித்தறியலாம் வாங்க.

Free Goat Shed Scheme – Recent maattu kottagai

விண்ணப்பம் கிடைக்கும் இடம்:-

கால்நடை மருந்தகங்கள், கிளை நிலையங்கள் மூலம், விவசாயிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. எனவே விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று பயன் பெறலாம்.

newவிவசாய டிராக்டர்கள் கடனுதவி திட்டம்

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

ஆடு கொட்டகை அமைத்தல்: சரியாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, விவசாயிகளிடம் இருந்து கால்நடை துறையினர் வாங்கி, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பர். பின்னர், அந்த விண்ணப்பங்கள், அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பங்களை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர், ஆவின் துறை உதவி ஆய்வாளர் மற்றும் கால்நடை துறை ஆய்வாளர் ஆகியோர் கொண்ட குழு, விண்ணப்பித்த விவசாயிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கால்நடைகள் வளர்த்து வருகிறார்களா, வீட்டருகே கொட்டகை அமைக்க போதிய சொந்த நிலம் உள்ளதா என ஆய்வு செய்யும். பின்னர், தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து, திட்ட அலுவலர் மூலம், ஆட்சியருக்கு அனுப்பி, நிர்வாக அனுமதி பெறப்படும்.

கொட்டகை அமைக்கும் பணியில், நுாறு நாள் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். மேலும், ஊராட்சி நிர்வாகம் கொட்டகை அமைக்கும் பணியை, வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்பார்வையிடுவார். பணிகள் முடிந்த பின், சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் கொட்டகை ஒப்படைக்கப்படும்.

newகிசான் கடன் அட்டை பெறுவது எப்படி? மற்றும் அதன் பயன்கள்..!

இந்த திட்டத்தில் பயன்கள்:-

ஆவின் துறை மூலம் கொட்டகை அமைப்பவர்களுக்கு, இரண்டு மாடுகளுக்கு 79,000/- ரூபாய் என மாடுகள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, அதிகபட்சமாக 10 மாடுகளுக்கு 2.15 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

ஆவின் துறை மூலம் பயனாளிகளுக்கு 200 மாடுகள் வழங்கப்படும்.

அதே போல், 10 ஆடுகளுக்கு 85,000/- ரூபாய் என எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 30 ஆடுகள் வரை 1.80 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

இதே போல் 100 நாட்டுக் கோழிகளுக்கு 77,000/- ரூபாய் என அதிகபட்சமாக 250 கோழிகளுக்கு 1.03 லட்சம் ரூபாய் கொட்டகை அமைக்க இலவசமாக வழங்கப்படும்.

விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் —> APPLICATION LINK

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> pasumai vivasayam in tamil
Advertisement