ஸ்வாதி வகாரியா
இந்தியாவில் பல இளைஞர்கள் வேலை தேடுபவராக இல்லாமல் வேலை வழங்குபவர்களாக மாறியுள்ளனர். இன்று பல இந்திய தொழில்முனைவோர் உருவாக்கியுள்ளது. அவர்களின் வெற்றிக்கதைகள் இன்னும் பல இளைஞர்களுக்கு தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க உத்வேகத்தை அளிக்கின்றன. பலர் தங்கள் வேலையை விட்டுவிட்டு தங்கள் கல்விப் பின்னணியுடன் தொடர்பில்லாத துறைகளில் தொழில் தொடங்குகின்றனர் அவர்களில் பலர் எட்டமுடியாத உயரத்தையும் அடைந்துள்ளனர். கடந்த சகாப்தத்தில் இந்தியாவில் பல தொழில்முனைவோரை உருவாக்கியுள்ளது, அவர்களில் பலர் முதல் தலைமுறை தொழில்முனைவோர் எளிய பின்னணி மற்றும் சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளும் இளம் தொழில் முனைவோரை ஆதரிப்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதில் இந்திய அரசின் ஸ்டார்ட்அப் இந்தியா மிக முக்கியமானதாகும். இந்த திட்டத்தால் பயன் அடைந்தோர் அதிகம். நீங்களும் அவர்களில் ஒருவராக மாற வேண்டுமா, அவர்களின் முயற்சிகள், அவர்கள் கடந்துவந்த தடைகள் எல்லாம் தெரிந்தால் உங்களாலும் ஒரு சொந்த தொழிலைத் தொடங்க முடியும் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.வாருங்கள் இன்று ஆயுர்வேத துறையில் புதுமை புகுத்திய நாபி சூத்ரா நிறுவனத்தை பற்றியும் தான் நிறுவனர் ஸ்வாதி வகாரியா பற்றியும் தெரிந்து கொள்வோம்.
நாபி சூத்ரா மற்றும் வுமன் பிளானட்டின் நிறுவனத்தின் ஆரம்பம்:
ஸ்வாதி வகாரியாவின் தொடக்க காலங்கள்:
குஜராத்தின் வதோதராவில் பிறந்து வளர்ந்த ஸ்வாதி வகாரியா, நாபி சூத்ரா மற்றும் வுமன் பிளானட்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
ஸ்வாதி வகாரியா பள்ளி நாட்களில், விளையாட்டில் அதிக ஈடுபாடுடன் இருந்த காணப்பட்டார். பள்ளி இறுதி வகுப்பில் படிப்பின் மீது கவன செலுத்தி, MBA பின்நாஸ்ஸ் மேனேஜ்மென்ட் முடித்தார்.பிறகு சில வருடங்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செயல்பாட்டு நிர்வாகியாக பதவி வகித்தார்.
தொழில் முனைவோராக மாறிய ஸ்வாதி வகாரியா:
பின்னர் நண்பர்கள் தொடங்கிய பிளாக் ஐடி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஐடி நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஸ்வாதி விளங்கினார். இந்த நிறுவனம் ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் எஸ்சிஓ பற்றிய புரிதலை வழங்கியதாக கூறும் ஸ்வாதி 7 வருடம் இந்த நிறுவனத்தில் செலவிட்டார். பிறகு தனக்கென்று ஒரு புதிய பாதையை உருவாக்கிக்கொள்ள நினைத்த அவர் தனது கனவு முயற்சியாக வுமன் பிளானட்டைத் தொடங்கினார். வுமன் பிளானட் பெண்களுக்கான ஒரு தலமாக வடிவமைத்தார். அதில் இயற்கை மற்றும் அதனை சார்ந்த சமூகத்தை பாதுகாப்பது, ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக போராடுவது, பெண்களை தலைமை பண்பை வெளிப்படுத்துவது போன்றவற்றை வுமன் பிளானட் தளத்தின் மூலம் செயப்படுத்தினர். அது மட்டும் அல்லாமல் கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு கல்வி கற்பதற்காக வடிவமைக்கப்பட்ட ‘முஸ்கான்’ என்ற பிரச்சாரத்தையும் நடத்துகிறார்.
நாபி சூத்ரா:
நாபி சூத்ரா 2019 இல் ஸ்வாதி வகாரியா தொடங்கப்பட்டது, ஸ்வாதி ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் மற்றும் ஆரோக்கிய தீர்வுக்காக பழங்கால மருத்துவ முறையான ஆயுர்வேதத்தால் ஈர்க்கப்பட்டு நாபி சூத்ரா என்னும் ஆயுர்வேத மூலிகைகள் விற்பனை தளத்தை தொடங்கினர்.
நாபி சூத்ராதொடங்குவதற்கு முன் ஆயுர்வேதத்தை பற்றி உறவினர்கள் மற்றும் பலரின் உதவியுடன் ஆய்வுகளை ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க போதுமான அறிவை பெற்றபின்னர் மக்களுக்கு புதுமையுடன் கூடிய இயற்கையான மற்றும் தூய்மையான ஆயுர்வேத மூலிகைகள் எண்ணெயை அறிமுகப்படுத்தினார். ஹெல்த்கேர் ஸ்டார்ட்-அப் மூலம் தனது மூலிகை எண்ணெய்களை வழங்கினார்.
Nabhi Sutra founder swati vakharia success story in tamil:
Nabhi Sutra தயாரிப்புகள் Amazon, Etsy, Flipkart போன்ற தளங்கள் மற்றும் அவர்களில் Nabhi Sutra தளத்திலும் கிடைக்கிறது. Nabhi Sutra நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அங்காடிகளை தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.
ஃபேஷன் உலகின் புதிய பரிமாணத்தை உருவாக்கிய நிதி யாதவின் வெற்றிக்கதை
இன்றுவரை, Nabhi Sutra ஆனது இந்தியாவில் 20,000க்கும் மேற்பட்ட தொடர் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான Femina power என்னும் பிராண்டையும் பெற்றுள்ளது. Nabhi Sutra நிறுவனம் 2022 ம் ஆண்டு ரூ.3 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. வரும் ஆண்டில் அந்த நிறுவனத்தின் வருவாய் ரூ.5 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும்மல்லாமல் முதலீட்டாளர்களை ஈர்ப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
நீங்கள் தொழில் தொடங்க இது சரியான நேரமாக இருக்கும் என நினைக்கிறேன். உங்களின் புதுமையான ஐடியாவை கொண்டு நீங்களும் வெற்றியடைய எங்களுடைய வாழ்த்துக்கள். மேலும் எது போன்ற தொழில் முனைவோர்களில் வெற்றிக்கதையை தெரிந்துகொள்ள எங்கள் தளத்தை பின்தொடருங்கள்..
இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | success story |