Wolf Information in Tamil
நாம் அனைவருக்குமே விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் நமக்கு அனைத்து விலங்குகளையும் பிடிக்குமா என்றால் இல்லை என்பதே ஏன்னென்றால் நம்மை பயமுறுத்தும் சில விலங்குகளும் இந்த உலகில் உள்ளது என்றே கூற வேண்டும் அப்படி நம்மை மிகவும் அச்சத்து உள்ளாக்கும் பல விலங்குகளில் ஒன்று தான் இந்த ஓநாய்கள். இவற்றை பார்க்கும் பொழுதே நமக்கு மிகவும் அச்சமாக இருக்கும்.
அப்படிப்பட்ட ஓநாய்களை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரியுமா என்றால் இல்லை என்பதே உண்மை. அதனால் இன்றைய பதிவில் ஓநாய்கள் பற்றிய முழுவிவரங்களையும் பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
வரிக்குதிரை பற்றி அறிந்து கொள்ள இவ்வளவு விஷயம் உள்ளதா
இனம்:
ஓநாய் அல்லது சாம்பல்நிற ஓநாய் என்பது நாய்ப் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். அதேபோல் ஓநாய்கள் பொதுவாக கேனிடே ( Canidae ) குடுப்பத்தை சேர்ந்த மிக பெரிய உறுப்பினர்கள் ஆகும்.
காட்டு விலங்காகிய ஓநாய்களைப் பழங்காலத்து மாந்தர்கள் பழக்கி வேறு இனங்களாகத் திரித்து உருவாக்கியவைதான் வீட்டு நாய்கள் என உயிரியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
உடல் அமைப்பு:
இவை வீட்டு விலங்குகளான நாயை விட உருவில் பெரியது. அதாவது முழுதும் வளர்ந்த ஓநாய்கள் 35 முதல் 55 கிகி எடை இருக்கும். மூக்கில் இருந்து வால் நுனி வரை ஏறத்தாழ 1.5-2 மீ நீளம் இருக்கும். 75 செ.மீ உயரம் இருக்கும். மேலும் இதன் முன் பாதங்களில் ஐந்து விரல்களும், பின் பாதங்களில் நான்கு விரல்களும் இருக்கும்.
பெண் ஓநாய்கள் சற்று சிறியதாக இருக்கும்.
வகைகள்:
ஓலைகளில் இன்றைய சூழலில் இரண்டு வகைகள் தான் உள்ளன. அதில் முதலாவது இனம் என்றால் அது சாம்பல்நிற ஓநாய் (Gray wolf), இரண்டாவது வகை செந்நாய் (Red wolf) ஆகும். இதில் சாம்பல்நிற ஓநாய் 38 வெவ்வேறு கிளையினங்களைக் கொண்டுள்ளது.
உணவு முறை:
இந்த ஓநாய்கள் முயல், மான், ஆடு, செம்மறி ஆடு, வான்கோழி போன்ற பிற சிறிய பாலூட்டிகளை பிரத்தியேகமாக உண்பதால், ஓநாய்கள் ஒரு மாமிச உண்ணிகளாகும்.
வாழ்விடம் மற்றும் வாழ்க்கை முறை:
இந்த ஓநாய் இனம் வட அமெரிக்காவிலும், ஆசியா முழுவதிலும் உள்ள காடுகளில் காணப்படுகின்றது. இப்பொழுது ஒரு காட்டில் ஓநாய் கூட்டம் உள்ளது என்றால் அதில் உள்ள ஒரே ஒரு ஆணும் பெண்ணும் மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன.
ஒரு பெண் ஓநாய்கள் ஒரே நேரத்தில் 4 முதல் 7 குட்டிகளைப் பெற்றெடுக்கிறது.
ஆயுட்காலம்:
பொதுவாக ஓநாய்களின் சராசரி ஆயுட்காலம் காடுகளில் 8 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும்.
குதிரை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
இதுபோன்று விலங்குகள் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 | Animals in Tamil |