குறுகிய கால டெபாசிட்.. அதிக வட்டி SBI வங்கியில் சூப்பரான சேமிப்பு திட்டம்..!

Advertisement

அம்ரித் கலாஷ் ஸ்பெஷல் டெபாசிட் ஸ்கீம் | Amrit Kalash Scheme in Tamil

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா குறுகிய காலத்தில் அதிகமான வட்டி தரக்கூடிய சேமிப்பு திட்டத்தை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். ஆக தகவலை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அம்ரித் கலாஷ் என்னும் ஒரு ஸ்பெஷல் டெபாசிட் திட்டத்தை பொது மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளனர். இந்த ஸ்கீமினுடைய கால அளவு 400 நாட்கள் ஆகும். ஆக இந்த சேமிப்பு திட்டம் குறித்த தகவலை பற்றி இப்பொழுது நாம் முழுமையாக படித்தறியலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

அம்ரித் கலாஷ் ஸ்பெஷல் டெபாசிட் ஸ்கீம்:Amrit Kalash Scheme

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா குறுகிய காலத்தில் அதிகமான வட்டி தரக்கூடிய அம்ரித் கலாஷ் ஸ்பெஷல் டெபாசிட் என்னும் ஸ்கீமை பொது மக்களுக்கு வழங்குகிறார்கள். இந்த திட்டத்தின் கால அளவு 400 நாட்கள் ஆகும்.

ஆக நீங்கள் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்திர்களோ அந்த தொகை மற்றும் அதற்கான வட்டியினையும் சேர்த்து உங்களுக்கு வாங்குவார்கள்.

இந்த ஸ்பெஷல் டெபாசிட் ஸ்கீமை ஏப்ரல் 12, 2023-ஆம் தேதி SBI வங்கி பொது மக்களுக்கு அறிமுகம் செய்தது..

இந்த ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் ஸ்கீமில் நீங்கள் சேர விரும்புனீர்கள் என்றால் டிசம்பர் 31, 2023 அன்று வரை தான் நீங்கள் இணைய முடியும். அதற்கு அப்பறம் இந்த ஸ்கீமை SBI வங்கி நீட்டிப்பார்கள் இல்லையா என்பது அதன் பிறகு தான் தெரியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆக்சிஸ் பேங்கில் 5 லட்சம் பிசினஸ் லோன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

அம்ரித் கலாஷ் ஸ்பெஷல் டெபாசிட் ஸ்கீமின் குறைந்தபட்ச முதலீட்டு தொகை 1000 ரூபாய் ஆகும். அதிகபட்சமாக நீங்கள் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

இந்த ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் ஸ்கீமில் General Punlic-க்கு 7.10% வட்டி வழங்கபடுகிறது. அதுவே Senior Citizen-க்கு 7.60% வட்டி வழங்கபடுகிறது.

நாமினேஷன் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. அதேபோல் கடன் உதவியையும் பெறலாம். இருப்பினும் நீங்கள் எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளீர்களோ அதனை பொறுத்து கடன் பெரும் வசதி என்பது மாறுபடும்.

இந்த ஸ்கீமை நீங்கள் SBI Branch/ Internet Banking/ Yono App மூலமாக இணையலாம்.

மேலும் இந்த திட்டத்தில் Account Transfer Facility-ம் உள்ளது.

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?

5,00,000/- ரூபாயை ஒருவர் 400 நாட்களுக்கான அம்ரித் கலாஷ் ஸ்கீமில் முதலீடு செய்தால் General Punlic-க்கு அதாவது 60 வயதிற்கு குறைவானவர்களுக்கு 40,029 ரூபாய் வட்டியை சேர்த்து உங்களுக்கு மொத்தமாக 5,40,029/- ரூபாய் வழங்கப்படும்.

Senior Citizen-க்கு அதாவது 60 வயதிற்கு மேல் உள்ளவர்களாக இருந்து இந்த ஸ்கீமில் முதலீடு செய்திருந்தால் 42,938/- ரூபாய் வட்டியை சேர்த்து உங்களுக்கு மொத்தமாக 5,42,938/- ரூபாய் வழங்கப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தங்கத்தின் மீதான கடனுக்கு வட்டி எவ்வளவு தெரியுமா ?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement