ICICI வங்கியில் Credit கார்டு பெறுவதற்கு தேவையான தகுதி மற்றும் ஆவணங்கள் என்ன தெரியுமா..?

Advertisement

ICICI Bank Credit Card Eligibility in Tamil

பொதுவாக நாம் அன்றாடம் வங்கியில் உள்ள பல சலுகைகளை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அப்படி அறிந்து கொண்ட சலுகைகளை ஒரு முறையாவது பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆசை நமது மனதில் இருக்கும். அப்படி நமது மனதில் உள்ள ஆசைகளில் Credit கார்டும் ஒன்று. ஒரு முறையாவது Credit கார்டு வாங்கி பயன்படுத்தி விட வேண்டும் என்று மனதில் இருக்கும். ஆனால் Credit கார்டு வாங்க என்ன தகுதி மற்றும் ஆவணங்கள் வேண்டும் என்ற குழப்பமும் இருக்கும். இப்படிபட்ட குழப்பம் உங்களுக்கும் உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் ICICI வங்கியில் Credit கார்டு பெறுவதற்கு தேவையான தகுதி மற்றும் ஆவணங்கள் என்னென்ன என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

ICICI Bank Credit Card Eligibility in Tamil:

முதலில் ICICI வங்கியில் Credit கார்டு பெறுவதற்கு தேவையான தகுதி என்னென்ன என்பதை பற்றி தான் விரிவாக காணலாம்.

நீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.

உங்கள் ஆண்டு வருமானம்  ரூபாய் 2.5 லட்சமாக இருக்க வேண்டும்.

உங்களிடம் 750 அல்லது அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> HDFC Bank-ல் Credit கார்டு பெறுவதற்கான தகுதிகள் மற்றும் ஆவணங்கள் என்னென்ன

சம்பளம் பெறுவோருக்கான தகுதி :

  • உங்கள் வயது 21 முதல் 58 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சுயதொழில் செய்பவர்களுக்கான தகுதி :

  • உங்கள் வயது 21 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • கடந்த 12 மாதங்களுக்கான வருமான வரிக் கணக்கை நீங்கள் காட்ட வேண்டும்.

ICICI Bank Credit Card Documents Required in Tamil:

  • ஆதார் அட்டை
  • பாஸ்போர்ட்
  • வாக்காளர் ஐடி
  • பான் கார்டு
  • ஓட்டுநர் உரிமம்
  • வருமான வரி சான்றிதழ்
  • வங்கி அறிக்கை
  • ஐடிஆர்

 ICICI வங்கியில் வீட்டு லோன் பெறுவதற்கு தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

Advertisement