IND Supreme 300 Days FD Scheme Full Details in Tamil
நண்பர்களுக்கு வணக்கம் இந்தியன் வங்கி பொது மக்களுக்கு பல்வேறு விதமான கால அளவில் பிக்சட் டெபாசிட் திட்டத்தை வழங்குகிறார்கள். அவற்றில் ஓன்று தான் இந்த IND Supreme 300 Days பிக்சட் டெபாசிட் ஸ்கீம் ஆகும்.
இந்த பதிவில் நாம் இந்த IND Supreme 300 Days பிக்சட் டெபாசிட் ஸ்கீம் பற்றிய முழுமையான தகவலை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம், அதாவது இந்த திட்டத்திற்கு தற்பொழுது எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது, எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது குறித்த முழுமையான தகவலை பற்றி அறியலாம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
IND Supreme 300 Days பிக்சட் டெபாசிட் ஸ்கீம்:
உங்களிடம் ஒரு பெரிய தொகை இருந்து அதனை ஏதாவது ஒரு முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்து அதன் மூலம் வட்டி பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் இந்த IND Supreme 300 Days பிக்சட் டெபாசிட் ஸ்கீமில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
பெண் குழந்தைகளின் திருமண வயதில் 67 லட்சம் தரும் சூப்பர் திட்டம்..!
இந்த திட்டத்தின் முதலீட்டு காலம் 300 நாட்கள் ஆகும். 300 நாட்களுக்கு பிறகு நீங்கள் முதலீட்டு செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி இரண்டியும் சேர்த்து பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கான குறிந்தபட்ச முதலீட்டு தொகை 5000 ரூபாய் ஆகும். அதிகபட்சம் தொகை என்று பார்க்கும் போது கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
இந்தியன் வங்கியின் இந்த 300 நாட்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி: General Public-க்கு 7.05% வட்டி வழங்கப்படுகிறது, Senior Citizen-க்கு 7.55% வட்டி வழங்கப்படுகிறது மற்றும் Super Senior Citizen-க்கு 7.80% வட்டி வழங்கப்படுகிறது.
இந்த IND Supreme 300 Days பிக்சட் டெபாசிட் ஸ்கீம் கால அளவு 31/12/2023 அன்றைய நாள் வரை மட்டும் தான். அதன் பிறகு இந்தியன் வங்கி இந்த திட்டத்திற்கான கால அளவை நீட்டிப்பார்களா என்பது பிறகு தான் தெரியும். ஆக டிசம்பர் 31 தேதிக்குள் இத்திட்டத்தில் அக்கௌன்ட் ஓபன் செய்ய விரும்புபவர்கள் ஓபன் செய்துகொள்ளலாம்.
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
முதலீட்டு தொகை | General Public | Senior Citizen | Super Senior Citizen | |||
வட்டி | மொத்த தொகை | வட்டி | மொத்த தொகை | வட்டி | மொத்த தொகை | |
ரூ.1,00,000/- | ரூ.5,930/- | ரூ. 1,05,930/- | ரூ. 6,360/- | ரூ.1,06,360/- | ரூ.6,576/- | ரூ.1,06,576/- |
ரூ.5,00,000/- | ரூ.29,654/- | ரூ.5,29,654/- | ரூ.31,803/- | ரூ.5,31,803/- | ரூ.32,881/- | ரூ.5,32,881/- |
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
வங்கியில் 2,000 முதலீடு செய்தால் 1,46,553/- கிடைக்கும் அசத்தலான திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |